Monday 22 October 2018

ஆசிரியர்கள், கற்பித்தல் & தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள்

ஆசிரியர்களின் பங்கு

தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கற்பிக்கும் ஆசிரியர்கள் வழிகாட்டிகளாக இருக்கும் வகையில் அவர்களுடைய பங்கு மாறியிருந்தாலும், வகுப்பறைத் தலைவராக செயல்படும் பங்கில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை.  எனினும் ஆசிரியர்களின்  வழக்கமான தலைமைப் பாங்கு மற்றும் செயல்பாடுகள், குறிப்பாக பாடங்களைத் திட்டமிடுவது, தயாரிப்புப் பணிகள் செய்வது மற்றும் தொடர்ந்து கண்காணிப்பது ஆகியவற்றில் இன்றும் முக்கியத்துவம் உள்ளதாக இருக்கிறது.
தகவல் தொழில் நுட்பங்களைப்  பயன்படுத்தும் போது, பாடங்களைத்  திட்டமிடல் மிகவும் அவசியம்:
ஆசிரியர்கள், தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் போது, பாடங்களைச் சரியாக திட்டமிடுதல் மிகவும் அவசியமாகும்.  அவ்வாறு செய்யாவிட்டால், மாணவர்களின் செயல்பாடு ஒருமுகப்படுத்தப்படாமல், முடிவுகள் எதிர்பார்த்த அளவில் இல்லாத சூழல் ஏற்படும்.

கற்பித்தல் முறை

தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதால் மட்டுமே, கற்பித்தல்-கற்றல் சூழ்நிலையை மாற்ற இயலாது
தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதால் மட்டுமே கற்பித்தல் முறைகளை மாற்ற இயலாது.  எனினும், ஏதுவான வாய்ப்புகள் இருக்கும் நிலையில், தங்கள் கற்பிக்கும் முறைகளை மாற்றியமைத்துக் கொள்ள அவை ஆசிரியர்களுக்கு உதவும். ஆசிரியர்களின் கற்பித்தல் முறைகள் மற்றும் காரணவியல் அறிவு, தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை ஆசிரியர்கள் பயன்படுத்தும் விதம் ஆகியவை மாணவர்கள் கற்றலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
கற்போரை மையப்படுத்திய கல்விச் சூழலை உருவாக்க ஆசிரியர்களுக்கு உதவக்கூடிய கருவியாக தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் காணப்படுகின்றன 
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான நிறுவன (OECD - Organization for Economic Co-operation and Development)  உறுப்பு நாடுகளில், தகவல் தொழில்நுட்பங்கள் உதவியுடன் மாணவர்களின்  புரிதல் மற்றும் சிந்தனையை, முழு வகுப்பு அல்லது சிறு குழு விவாதங்கள் மூலம் சீர்படுத்துவதே, தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களின் சிறந்த பயன்பாடு என்ற ஒத்த கருத்து நிலவுகிறது.  ஆசிரியரை மையப்படுத்திய முறைகளிலிருந்து, கற்போரை மையப்படுத்திய கல்வி முறைகளுக்கு மாறும் முயற்சிகளை ஊக்குவிப்பதாகவும், ஆதரிப்பதாகவும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் கருதப்படுகின்றன.

தற்போதைய கற்பிக்கும் முறைகளை மாற்றியமைக்க மற்றும் ஆதரிக்க தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தலாம்:

தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கற்பிக்கும் ஆசிரியர்களின் கற்பிக்கும் முறைகளில், வழக்கமான முறைகளில் சிறிதளவு அல்லது பெரிய அளவிலான அடிப்படை மாற்றங்கள் நிகழலாம்.  தற்போதைய கற்பிக்கும் முறைகளை வலுப்படுத்தவும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே நிகழும் உறவுநிலைகளை மாற்றியமைக்கவும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் உதவுகின்றன.
தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைக் கருவியாகப் பயன்படுத்தி தகவல்களைக் காட்சிப்படுத்துவது, கலவையான முடிவுகளைத் தருகிறது:
தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைக் காட்சிப்படுத்தும் கருவியாகப் பயன்படுத்துவது (ஒளிப்படக்காட்சிகள், LCD புரஜக்டர்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், திரையில் காட்டப்படும் அதே நேரத்தில் மாணவர்களும் கணினி திரையில் பார்க்கும் வகையிலான காட்சிகள் போன்றவற்றில்), கடினமான பாடங்களை எளிதில் புரிந்துகொள்ளவும், விவாதங்களை ஊக்குவிக்கவும் (குறிப்பாக சூழ்நிலைகளை உண்டாக்கி தெளிவுபடுத்தல் - simulations) உதவுவது மட்டுமல்லாமல், வழக்கமான கற்பிக்கும் முறைகளை வலுப்படுத்தும் அதே வேளையில், காண்பிக்கப்படும் காட்சியின் பொருளில் கவனம் செல்லாமல், காண்பிக்கப் பயன்படும் கருவிகள் நோக்கி கவனம் சிதறவும் வாய்ப்புகள் உள்ளது.

ஆசிரியர்களின் தொழில்நுட்பத்திறன் மற்றும் தகவல் -தொடர்பு தொழில்நுட்பங்கள் பற்றிய அறிவு

ஆசிரியர்கள் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் மூலம் பயனடைய, தொழில்நுட்பத்திறன் மட்டுமே போதாது:

தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைக் கற்பித்தல் பயன்பாட்டில் சிறப்பாக ஒருங்கிணைக்க, அவற்றை பயன்படுத்த தேவையான திறன்கள் மட்டுமே ஆசிரியர்களுக்கு போதுமானதல்ல.
எப்போதாவது நடத்தப்படும் பயிற்சிகள் போதாது 

சரியான வளங்களை தேர்ந்தெடுக்க மற்றும் மதிப்பிட, ஆசிரியர்களுக்கு தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பற்றிய விரிவான, தொடர் பயிற்சிகள் அவசியம். எனினும், தகவல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்திறன்களை விட, கற்பித்தல் முறைகளை மேம்படுத்த அவற்றை எப்படி பயன்படுத்துவது என்பதில் அதிக கவனம் தேவை.
தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைத் தங்கள் கற்பித்தலில் பயன்படுத்தும் பரந்துபட்ட திறன் வெகு சில ஆசிரியர்களுக்கு மட்டுமே உள்ளது
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான நிறுவன (OECD)  உறுப்பு நாடுகளில் உள்ள மிகத்தரமான பள்ளிகளில் கூட, வெகு சில ஆசிரியர்களுக்கு மட்டுமே, பல வகையான தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் முறைகளைப் பற்றிய விரிவான அறிவு உள்ளது.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான நிறுவன (OECD)உறுப்பு நாடுகளில், தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைக் கற்பிக்கும் கருவிகளாக பயன்படுத்துவது, அவற்றின் மூலம் கணினி தொடர்பான கல்வி அளிப்பதை விட முக்கியமாகக் கருதப்படுகிறது: 

தொழில்நுட்பங்களை அன்றாட கற்பித்தலில் பயன்படுத்துவது, அவற்றை கொண்டு கணினிப் பயன்பாடுகளை அதிகப்படுத்துவதை விட முக்கியாமானதாக, OECD உறுப்பு நாடுகளின் அனுபவங்கள் கூறுகின்றன. கற்பிக்கும் முறைகளை மாற்றியமைக்க, தொழில்நுட்பத்திறன்களை மேம்படுத்துவது முக்கியம் என்றாலும்,   பிற கற்பித்தல் வழிமுறைகளை அவற்றைக் கொண்டு வலுப்படுத்துவது, மிகவும் முக்கியமானது.  அதிகப்படியாக கணினி தொடர்பான பாடத்திட்டங்களில் கவனம் செலுத்தாமல், அவற்றை அன்றாட ஆசிரியர்-மாணவர் தொழில்முறை மேம்பாட்டில்  கவனம் செலுத்தும் பள்ளிகளில், மாணவர்களது தகவல் தொடர்பு தொழில்நுட்பத்திறன் அதிகமுள்ளதாக கருதப்படுகிறது.
தொழில்நுட்ப பயன்பாட்டில், ஆசிரியர்களை விட மாணவர்கள் அதிக திறனுள்ளவர்களாக இருக்கிறார்கள்

OECD உறுப்பு நாடுகளில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே நிலவும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப அறிவு மற்றும் பயன்பாட்டுத் திறனில் அதிக வேறுபாடுகள் நிலவுவதாகத் தெரிகிறது. கற்பதில் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் மாணவர்களிடையே நிலவும் குறைபாடுகளுக்கு, ஆசிரியர்களின் அனுபவங்கள் மற்றும் திறன் குறைபாடுகள் காரணமாக இருக்கக்கூடும் என்பது இதன் மூலம் தெரிகிறது.

ஆசிரியர்களின் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் பயன்பாடு

தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை, ஆசிரியர்கள் பெரும்பாலும் நிர்வாகப் பணிகளுக்கே பயன்படுத்துகிறார்கள்

ஆவணத் தயாரிப்பு, பாடத்திட்ட தயாரிப்பு, தகவல் காட்சிப்படுத்துதல், அடிப்படை தகவல் தேடல் போன்ற அன்றாட பணிகளுக்கே ஆசிரியர்கள் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை- அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்.
அதிக  ஞானமுள்ள ஆசிரியர்கள், கணினி அடிப்படையிலான பாட போதனையை குறைவாக சார்ந்திருக்கிறார்கள் 

தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் அதிக ஞானமுள்ள ஆசிரியர்கள், அவற்றை பயன்படுத்தும் பிற ஆசிரியர்களை விட, கணினி அடிப்படையிலான பாட போதனையை குறைவாக பயன்படுத்தினாலும், ஒட்டுமொத்த அளவில் அவற்றை பயன்படுத்துகிறார்கள்.
தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை ஆசிரியர்கள் பயன்படுத்தும் முறை, அவர்களின் பொதுவான கற்பிக்கும் பாணியை பொறுத்தே அமைகிறது -
ஆசிரியர்கள் கொண்டிருக்கும் கற்பிக்கும் கொள்கைகளைப் பொறுத்தே அவர்கள் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் முறை அமைகிறது.  தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை அதிகமாக மற்றும் சிறப்பாக பயன்படுத்தும் ஆசிரியர்கள், பொதுவான நேரடி போதனை முறைகளைப் பயன்படுத்துவதில்லை.  மென்பொருட்களை அதிகம் பயன்படுத்தும் ஆசிரியர்கள், ஆக்கப்பூர்வமான கற்பிக்கும் முறைகளை கடைபிடிக்கிறார்கள்.
தகவல் தொழில்நுட்பங்களைக் கொண்டு கற்பிக்கும் முறைகளுக்கு அதிக நேரம் தேவைப்படுகிறது -
வழக்கமாக கடைபிடிக்கப்படும் கற்பித்தல் முறைகள் மற்றும் யுக்திகளை மாற்றியமைக்க வேண்டியிருப்பதால், கற்பித்தலில் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவது மற்றும் பயன்படுத்துவதற்கு, ஆசிரியர்களுக்கு அதிக நேரம்  செலவாகிறது.
சுருக்கமாகக் கூறுவதானால், தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கற்பிக்க, அதிக நேரமாகிறது (அதே பாடத்தை நடத்த எவ்வளவு நேரம் கூடுதலாக தேவைப்படுகிறது என்பதில் கருத்துகள் வேறுபட்டு இருந்தாலும், பொதுவாக 10% என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது)

ஆசிரியர்களின் சுய நம்பிக்கை மற்றும் ஊக்கம்

தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில், சில ஆசிரியர்கள் மட்டுமே நம்பிக்கையுடன் செயல்படுகிறார்கள்

பல வகையான தகவல் தொடர்பு தொழில்நுட்ப வளங்களை, வெகு சில ஆசிரியர்களே நம்பிக்கையுடன் செயல்படுத்துகிறார்கள். குறைவான நம்பிக்கையுடன் செயல்படுவது, பாடங்களைச் சிறந்த முறையில் நடத்துவதைப் பாதிக்கும்.
பல ஆசிரியர்கள், பயம் காரணமாக தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில்லை 

OECD நாடுகளில், இன்றும் பல ஆசிரியர்கள் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த இருக்கும் பயம் காரணமாக அவற்றை உபயோகிக்க தயங்குகிறார்கள்
ஆரம்ப நிலைகளில், தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் ஆசிரியர்களை ஊக்குவிக்கிறது:
தகவல் தொடர்பு தொழில்நுட்ப ஈடுபாடு, ஆரம்ப நிலைகளில் ஆசிரியர்களின் தொழில்ரீதியான வளர்ச்சிக்குப் பங்களிக்கும் முக்கிய ஊக்குவிக்கும் கருவியாக இருக்கிறது.
தொழில்ரீதியான வளர்ச்சியில் ஆசிரியர்கள் சிறப்பாக பங்கெடுப்பதை மேம்படுத்த, ஊக்குவிப்பு முயற்சிகள் தேவை
ஆசிரியர்கள் தொழில்ரீதியான வளர்ச்சியில் பங்கெடுப்பதற்கு, கூடுதல் ஊக்குவிப்பு மற்றும் ஆதரவு ஆகியவை தேவைப்படுகின்றன. சான்றிதழ்கள் அளிப்பது, பணி முன்னேற்றம், ஊதிய உயர்வு, அவ்வாறான திட்டங்களில் பங்கெடுக்க ஊதியத்துடன் கூடிய அனுமதி, சக ஆசிரியர்கள், சமுதாயம் மற்றும் பள்ளிகளில் அங்கீகாரம் அளித்தல்,  குறைந்த புறக்கணிப்பு, கூடுதல் - செயல்திறன் போன்ற பல வழிகளில் ஊக்குவிக்கலாம்.
தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் எளிதில் கிடைப்பது, அவற்றை ஆசிரியர்கள் பயன்படுத்துகிறார்களா இல்லையா என்பதை தீர்மானிக்கும் முக்கிய காரணியாகும்:
ஆசிரியர்களின் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் திறன்கள் மேம்பட, தொடர்ச்சியான, செயல்படும் வகையிலான கருவிகள் எளிதில் கிடைப்பதும், முக்கியக் காரணியாகும்.

பாடத்தைப் பற்றிய அறிவு

ஆசிரியர்களின் பாட அறிவும், தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை பாதிக்கின்றன:
குறிப்பிட்ட பாடங்களில் பெற்றுள்ள ஆளுமை, ஆசிரியர்கள் எவ்வாறு தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப்  பாடங்களுடன் தொடர்புபடுத்திப் பயன்படுத்துகிறார்களஎன்பதைத் தீர்மானிக்கின்றன.
ஆசிரியர்களின் பாட அறிவும், மாணவர்களின் புரிதல் திறனும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைச் சிறப்பாக்குகின்றன: 
ஆசிரியர்கள் பாடம்  தொடர்பான தங்கள் அறிவைப் பயன்படுத்துதல் மற்றும் மாணவர்கள் அதை புரிந்து கொள்ளும் முறை ஆகியவை, தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் மாணவர்களின் சாதனைகளை எவ்வாறு பாதிக்கின்றன. என்பதைக் காட்டுகின்றன.
தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் மூலம் கிடைக்கும் புதிய மற்றும் கூடுதல் தகவல்கள் மட்டுமே போதுமானதல்ல:
புதிய மற்றும் கூடுதல் தகவல்களை விட, தங்களுடைய புரிதலைச் சிந்திக்கவும், கேள்வி கேட்கவும் வகை செய்தல், மாணவர்கள் சாதனையில் மேம்பட அதிக முக்கியமாகும்.
ஆசிரியர்கள், தங்களுடையப் பாடங்களைப் பற்றிய சுய கல்விக்கு தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் பயன்படும்:
புதிய மற்றும் கூடுதல் பாடங்கள், வளங்கள் ஆகியவை கிடைப்பதால், தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் ஆசிரியர்களின் சுய கல்விக்கு உதவுகின்றன.

ஆசிரியர்களின் தொழில்ரீதியான மேம்பாடு

கல்வியில் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தப்படுவதற்கு, ஆசிரியர்களுக்கு தொடர்ச்சியான பயிற்சிகள் மற்றும் ஆதரவு அவசியம்:
ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் மற்றும் தொழில்ரீதியான ஆதரவு, தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைக் கல்வியில் வெற்றிகரமாக பயன்படுத்தப்படுவதற்கு மிகவும் அவசியமாகும்.
ஆசிரியர்களின் தொழில்ரீதியான மேம்பாடு தொடர்ச்சியான செயல்முறை: ஒன்றுவிட்ட நிகழ்வுகள் அல்ல:
வழக்கமான அவ்வப்போது நடத்தப்படும் ஆசிரியர்  பயிற்சிப் பட்டறை, தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை  எளிதில் கையாள அல்லது வெற்றிகரமாக அவற்றை பாடங்களில் இணைத்து பயன்படுத்த ஆசிரியர்களுக்கு அதிகம் உதவுவதில்லை.  எப்போதாவது நடத்தப்படும் நிகழ்வுகள், தொடர் தொழில்ரீதியான மேம்பாட்டு முயற்சிகளை விட குறைந்த பலன்களையே அளிக்கின்றன.
தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை  அறிமுகப்படுத்துவது, ஆசிரியர்களின் தொழில்ரீதியான மேம்பாட்டு தேவைகளின் வீச்சை விரிவுபடுத்துகின்றன:
தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைக் கல்வியில் சிறப்பாக  பயன்படுத்துவது, அவர்களின் தொடர் பயிற்சிகள் மற்றும் தொழில்ரீதியான மேம்பாட்டுக்கான தேவைகளை அதிகரிக்கிறது. புதிய சிறப்பானப் பாடங்களை எளிதில் அணுகுதல், அன்றாட நிர்வாகப் பணிகளில் உதவி, சிறப்பாகக் கற்பிக்கும் முறைகளைப் பற்றிய அறிமுகம், நேருக்கு நேரான மற்றும் தொலைநிலைக்கல்வி வகைகளில் கற்போர் வலைப்பின்னல்களை உருவாக்குதல், ஆகியவற்றுக்கு உதவுவதால், அவ்வாறான தேவைகளை தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் பூர்த்தி செய்யும் கருவியாக விளங்குகின்றன.
வெற்றிகரமான, ஆசிரியர்கள் தொழில்ரீதியான மேம்பாட்டு மாதிரிகள், மூன்று கட்டங்களை உள்ளடக்கியுள்ளன:
வெற்றிகரமான, தொடர் தொழில்ரீதியான மேம்பாட்டு மாதிரிகள், மூன்று கட்டங்களை உள்ளடக்கியுள்ளன:
  1. பணியில் சேரும் முன்: கற்பிக்கும் முறைகளில் ஆரம்பத் தயாரிப்புகள், பாடத்திட்ட ஆளுமை, நிர்வாகத் திறன்கள், தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய பல்வேறு கற்பிக்கும் கருவிகளைப் பயன்படுத்துதல்.
  2. பணியில் இருக்கும் போது:  வடிவமைக்கப்பட்ட, நேருக்கு நேரான அல்லது தொலைநிலைக்கல்வி முறையிலான வாய்ப்புகள், பணியில் சேரும் முன் பெற்ற பயிற்சிகளை அடிப்படையாகக் கொண்டு, அவர்களின் நேரடி தேவைகள் பொருத்து பயிற்சிகள் அளித்தல்
  3. அன்றாட தேவைகள் மற்றும் சவால்களைக் கருதி, தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளிக்கப்படும் முறைபடுத்தப்பட்ட மற்றும் முறைசாரா வழிகளில் தொடர் பயிற்சிகள் மற்றும் ஆதரவு

ஆசிரியர்களின் சிறப்பான தொழில்ரீதியான மேம்பாடு, கற்பிக்கும் முறைகளை முறைப்படுத்த வேண்டும்:
ஆசிரியர்கள் தொழில்ரீதியானமேம்பாடு, வகுப்பறைச் சூழல்களை பெரிதும் மாதிரிப்படுத்தி அமைய வேண்டும். கற்றல் மற்றும் கற்பித்தல் ஆகியவற்றில் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் முக்கியக் கூறுகளாகப் பயன்படுத்தப்பட வேண்டி  இருந்தால், அதற்கான ‘செயல் ரீதியான” பயிற்சிகள் அவசியம். மேலும், தொழில்ரதியான மேம்பாட்டு முயற்சிகள், சிறந்த நடவடிக்கைகள் மற்றும் நடத்தை அடிப்படைகளிலும், ஆசிரியர்களிடையே கூட்டு முயற்சிகளை ஊக்குவிக்கும்  வகையிலும் அமைய வேண்டும். பள்ளிகளில் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் தொழிழ்ரீதியான மேம்பாட்டு முறைகள்,  ஆசிரியர்களின் அன்றாட நேரடித் தேவைகள் அல்லது முறைகளை மேம்படுத்தும் திறன் வகையில் இருப்பது முக்கிய காரணியாக கருதப்படுகிறது.
மதிப்பீட்டு முறைகளில் பயிற்சிகள் அளிப்பது முக்கியமாகும்:
கற்பிக்கும் முறைகளை மதிப்பிடத் தேவைப்படும் பல முறைகளைப் பற்றிய பயிற்சிகள், ஆசிரியர்களின் தொழில்ரீதியான மேம்பாட்டு முறைகளில் சேர்க்கப்பட வேண்டும்.
சிறந்த தொழில்ரீதியான மேம்பாட்டிற்கு, போதுமான திட்டமிடல் அவசியமாகும்:
சிறப்பான தொழில்ரீதியான மேம்பாட்டு முயற்சிகளுக்கு, தேவைகள் முன் ஆய்வு, நடவடிக்கைகள் தொடர் கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் கருத்துக் கேட்பு முறைகள் ஆகியவை ஏற்படுத்தப்பட வேண்டும். அவை ஆசிரியர்களின் தேவைகள் அடிப்படையில் அமைய வேண்டும்.
ஆசிரியர்களுக்கு தொடர்சியான ஆதரவு  தேவை:
ஆசிரியர்களின் தொழில்ரீதியான மேம்பாட்டுக்கு, தொடர்ச்சியான ஆதரவு அவசியம்.  இணையதளங்கள், விவாதக் குழுக்கள், மின்னஞ்சல் குழுக்கள், வானொலி அல்லது தொலைக்காட்சி ஒலிபரப்பு ஆகியவை உள்ளடங்கிய தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, இவ்வாறான ஆதரவை அளிக்கலாம்.

ஊக்குவிக்கும் காரணிகள்

ஆசிரியர்கள் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை முறைப்படுத்த, பல வகையான மாற்றங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்
கற்பிக்கும் முறைகளை மாற்றுதல், பாடத்திட்டங்களை மறுசீரமைத்தல் மற்றும் அவற்றை ஆய்வு செய்தல், பள்ளிகளுக்கு மேலும் தன்னாட்சி வழங்குதல், ஆகியவை, தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் பயன்பாட்டை முறைப்படுத்தும்.  பலவகையான ஊக்குவிக்கும் காரணிகள் இருக்கும் பட்சத்தில், ஆசிரியர்கள் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை நேரடியாக பயனளிக்கும் வகையில் தங்கள் பாடத்திட்டங்களைக் கற்பிக்கப் பயன்படுத்த முடியும்.
செயல்படக்கூடிய கருவிகள் அவசியம்
தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் சிறப்பாக பயன்படுத்தப்பட வேண்டுமானால், எளிதில் மற்றும் போதுமான அளவில் கணினிகளும், அவற்றை இயக்கத் தேவையான முறையான பயிற்சிகளும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கு சிறுது காலம் ஆகும்: 
தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைச் சிறப்பாகப் பயன்படுத்த, புதிய திறன்களை வளர்த்துக்கொள்ளுதல், அவற்றை தற்போதைய பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறைகளில் ஒருங்கிணைத்து பயன்படுத்துதல், கூடுதல் பாடங்களை திட்டமிடுதல், ஆகியவற்றுக்கு போதுமான கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும்.
பள்ளிகள் மற்றும் சமுதாயத்தின் ஆதரவும் தேவைப்படலாம்: 
தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைச் சிறப்பான முறையில் பயன்படுத்த, பள்ளி நிர்வாகம் மற்றும் சில நேரங்களில் சுற்றுப்புற சமுதாயத்தின் ஆதரவும் ஆசிரியர்களுக்கு மிகவும் முக்கியம்.   இதற்காக, இந்த இரு வகையான ஆதரவாளர்களுக்கும் புரிதல் அளிக்கக் கூடிய முயற்சிகள், சிறப்பான தகவல் தொடர்பு தொழில்நுட்ப பயன்பாட்டில் முதலீடு செய்வதற்கு மிகவும் அவசியமாகும்.
ஆசிரியர்களின் தொழில்ரீதியான மேம்பாட்டிற்கு, பயன்பாட்டாளர்களை இணைக்கும் குழுக்கள் பயன்படலாம்: 
முறையான மற்றும் முறைசாரா பயன்பாட்டாளர் குழுக்கள் மற்றும் சக ஆசிரியர் குழுக்கள், கற்பித்தலில் தகவல் தொடர்பு தொழில்நுட்ப பயன்பாட்டு முயற்சிகளை சீரமைக்க உதவும்.  தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அவ்வாறான அமைப்புகளை உருவாக்கலாம்.

கல்வித்துறையில் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்திய அனுபவங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும்: கல்வித்துறையில் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவது, ஒரு பெரிய அளவிலான மறுசீரமைப்பு முயற்சியாகும்.  எனவே, வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட அவ்வகை முயற்சிகளைப் பற்றிய அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்.

No comments:

Post a Comment