Monday 22 October 2018

ராஸ்ட்ரிய மத்யாமிக் சிக்ஸா அபியான்

ராஸ்ட்ரிய மத்யாமிக் சிக்ஸா அபியான் திட்டம்

எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான உயர்நிலைக் கல்வியை விரிவுபடுத்துவதையும் அதன் தரத்தை உயர்த்துவதையும் ராஸ்ட்ரிய மத்யாமிக் சிக்ஸா அபியான் திட்டம் (RSMA) நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சுமார் 5 கி. மீட்டருக்குள் உயர்நிலைக் கல்வியை (பத்தாம் வகுப்பு வரை) கொண்டு செல்ல உள்ளது. மத்திய அரசின் இந்த மிக சமீபத்திய திட்டம் அனைவருக்கும் உயர்நிலைக்கல்வி (USE) என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது லட்சக்கணக்கான குழந்தைகள் ஆரம்பக்கல்வி பெறவேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட சர்வ சிக்ஸா அபியான் திட்டம் பெருமளவு வெற்றி பெற்றுள்ளது. இதனால் நாடுமுழுவதும் உயர்நிலைக் கல்விக்கான கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் இதனைக் கருத்தில் கொண்டு உயர்நிலைக்கல்விக்கான திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. 11 ஆவது ஐந்தாண்டு திட்டகாலத்தில் ராஸ்ட்ரிய மத்யாமிக் சிக்ஸா அபியான் (RMSA) திட்டம் ரூ. 20,120 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது. "சர்வ சிக்ஸா அபியான் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டதன் விளைவாக அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் ஆரம்பக் கல்வியை முடித்து உயர்நிலைக்கல்வி பெற தயாராய் உள்ளனர் " என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

கண்ணோட்டம்

14 முதல் 18 வயதுடைய அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வியை எளியவழியில் குறைந்த செலவில் அளிப்பதை உயர்நிலைக் கல்வி நோக்கமாகக் கொண்டுள்ளது. அனைவருக்கும் உயர்நிலைக்கல்வி என்பதை நோக்கமாகக் கொண்டு பின்வருபவை எட்டப்படவேண்டும் :
  • எந்தவகை நிலப்பரப்பானாலும் குறிப்பிட்ட தூரத்திற்குள் ஒரு உயர்நிலைப்பள்ளி உருவாக்கப்பட வேண்டும். அதாவது 5 கி.மீக்குள் ஒரு உயர்நிலைப்பள்ளியும் 7-10 கி.மீக்குள் மேல்நிலைப் பள்ளி ஏற்படுத்தவேண்டும்.
  • 2017 ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் உயர்நிலைக்கல்வி என்ற நிலை எட்டப்படவேண்டும் (வருகைப்பதிவு 100%)
  • 2020 ஆம் ஆண்டிற்குள் பள்ளியில் சேர்ந்து அனைவரையும் இடையில் விலகிவிடாமல் தொடர்ந்து தக்கவைத்தல்.
  • பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர்,கல்வியில் பின்தங்கியவர்கள், பெண்கள்,ஊனமுற்ற குழந்தைகள்,கிராமப்புறத்தில் வசிப்போர் மற்றும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி & சிறுபான்மையினர் உள்ளிட்ட பின்தங்கிய மக்களும் உயர்கல்வி அளிப்பதில் சிறப்பு கவனம செலுத்துதல்.

நோக்கம் & குறிக்கோள்

அனைவருக்கும் உயர்நிலைக்கல்வி (USE) என்பதை அடைய வேண்டுமெனில் உயர்கல்வி பற்றி முற்றிலும் புதிய கருத்து அமைப்பு உருவாக்குதல் அவசியம். வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு. அனைவருக்கும் சென்றடைதல், சமத்தன்மை. சமூகநீதி, தற்காலத்தில் உள்ள பொருத்தம், மேம்பாடு, பாடத்திட்டம் மற்றும் அமைப்பு முறை. அனைவருக்கும் உயர்நிலைக்கல்வி என்பது சமூகத்தில் சமத்தன்மையை எட்ட வாய்ப்பாக அமைகிறது. 'பொதுவான பள்ளி’ என்ற கருத்து ஊக்குவிக்கப்பட வேண்டும். இந்த நெறிமுறைகள் பின்பற்றப்படுமேயானால் தனியார் பள்ளிகளும் நலிவடைந்தோர் & வறுமைக்கோட்டிற்கும் கீழே வாழும் குழந்தைகளையும் சேர்த்துக் கொண்டு அனைவருக்கும் உயர்நிலைக்கல்வி என்பதை அடைய உதவலாம்.
முக்கிய குறிக்கோள் :
  • அரசு/உள்ளாட்சி & அரசு உதவி பெறும் பள்ளிகளில் உரிய நிதி ஆதாரத்தினைக் கொண்டு அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியரகள் மற்றும் இதர வசதிகள் பரிந்துரைக்கப்பட்ட தரத்தில் ஏற்படுத்துதல். இதர பள்ளிகளில் அதற்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்குதல்.
  • பின்வரும் வழிமுறைகளின்படி பள்ளிகள் எளிதில் வந்து செல்லும் படி அமைக்கப்படவேண்டும். (5 கி.மீக்கும் ஒரு உயர்நிலைப்பள்ளியும் 7-10 கி.மீக்குள் மேல்நிலைப் பள்ளி, பாதுகாப்பான போக்குவரத்து வசதி, உள்ளூர் சூழ்நிலையைப் பொறுத்து திறந்த நிலைப் பள்ளிகள் ஏற்படுத்தல்). மலைப்பகுதிகளில் இந்த விதிமுறைகளில் சற்றே தளர்வு இருக்கலாம். அங்கு உறைவிடப்பள்ளிகள் அமைக்கலாம்.
  • பாலினம், சமூக-பொருளாதார வேறுபாடு, உடல் ஊனம் மற்றும் இதர பிற காரணங்களால் எந்த குழந்தையும் உயர்நிலைப்படிப்பை தவறவிட்டுவிடாமல் செய்தல்.
  • அறிவுசார், சமூக மற்றும் கலாசார ரீதியில் கற்றலை வளர்க்க தரமான உயர்கல்வி வழங்குதல்.
  • அனைத்து மாணவர்களும் தரமான கல்வியைப் பெறுவதை உறுதிபடுத்துதல்.
  • மேற்கண்ட குறிக்கோள்களை அடைந்துவிட்டால் நாம் சமச்சீர் கல்வியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம் எனக் கூறலாம்.
இரண்டாம் நிலையில் அணுகுமுறை மற்றும் உத்திகள்
அனைவருக்கும் உயர்நிலைக்கல்வி என்பதை அடிப்படையாகக் கொண்டால் கூடுதல் பள்ளிகள், கூடுதல் வகுப்பறைகள், கூடுதல் ஆசிரியர்கள் மற்றும் இதர கட்டமைப்புகளுக்காக அதிக அளவிலான உள்ளீடுகள் தேவைப்படுகின்றன. அப்போதுதான் நாம் அடைய நினைத்த எண்ணிக்கையிலான பள்ளிகள், அவற்றின் நம்பகத்தன்மை மற்றும் தரத்தை பெற முடியும். இவற்றுக்கு இணையாக கல்வி,உள்கட்டமைப்பு,மனிதவளம் வகுப்பறை உள்ளீடுகள் ஆகியவற்றின் தேவைகள் அறிதல் மற்றும் அவற்றை அளித்தல் முக்கியத்துவம் பெறுகிறது. திட்டத்தை செயல்படுத்துவதைக் கண்காணித்தலும் அவசியமே. முதற்கட்டமாக இத்திட்டம் 10 ஆம் வகுப்பு வரை செயல்படுத்தப்படும். இத்திட்டம் செயல்படுத்திய 2 ஆண்டுகளுக்குள் மேல்நிலைப் பள்ளிகள் இது விரிவுபடுத்தப்படும். அனைவருக்கும் உயர்நிலைக்கல்வி மற்றும் அவற்றின் தரத்தை உயர்த்துவதற்கான அணுகுமுறைகளும் மற்றும் உத்திகளும் பின்வருமாறு.

பெறும் வழி

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பள்ளி கல்வியில் மிகுந்த ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன. தனியார் பள்ளிகளுக்கிடையேயும், தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கிடையேயும் மிகுந்த வேறுபாடு காணப்படுகின்றது அனைவருக்கும் தரமான உயர்நிலைக்கல்வி என்ற நோக்கத்தை எட்ட தேசிய அளவிலான சிறப்பாக இயற்றப்பட்ட நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்.இந்த நெறிமுறைகள் பூகோள,சமூக-பொருளாதார, மொழி மற்றும் மக்கள்தொகை ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாநில/யூனியன் பிரதேசங்களுக்கும் ஏற்றபடி இருக்கும் வகையில் அமைய வேண்டும். தேவையிருப்பின் வட்டார அளவில் நெறிமுறைகளை வகுக்கலாம். இந்த வழிகாட்டு நெறிமுறைகள் கேந்த்ரிய வித்யாலயா பள்ளிகளுக்கு உள்ளவற்றைப் போல் இருக்க வேண்டும். அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் கற்றலுக்கான ஆதாரங்கள் பின்வரும் வழியில் பெருக்கப்படுகின்றன.
  • தற்போது உள்ள உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை விரிவுபடுத்துதல். இந்த பள்ளிகளில் ஷிப்ட் முறையைக் கையாளுதல்.
  • மைக்ரோ திட்ட வழிமுறைகளின்படி போதிய கட்டமைப்பு வசதி & ஆசிரியர்கள் கொண்டுள்ள நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இதற்கு ஆசிரமப் பள்ளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • தேவையின் அடிப்படையில் உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்
  • பள்ளி மேப்பிங் நெறிமுறைகளின்படி பள்ளிகளே இல்லாத பகுதிகளில் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்படும்.இப்பள்ளிகள் மழைநீர் சேகரிக்கும் அமைப்புடன் ஊனமுற்ற குழந்தைகளுக்கு ஏற்றபடி கட்டப்படும். ஏற்கனவே கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களில் புதிய மழைநீர் சேகரிக்கும் அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.
  • ஏற்கனவே உள்ள பள்ளி கட்டிடங்கள் ஊனமுற்ற குழந்தைகளுக்கு ஏற்றபடி மாற்றப்படும்.
  • அரசு மற்றும் தனியார் இணைந்த பங்களிப்புடன் புதிய பள்ளிகள் ஏற்படுத்தப்படும்.
தரம்
  • கரும்பலகை,மேஜை,நாற்காலிகள், நூலகம்,கணிதம் & அறிவியல் ஆய்வுக்கூடம், கணிணி மையம் மற்றும் கழிப்பிட வசதி உள்ளிட்ட தேவையான அடிப்படை வசதிகளை அளித்தல்.
  • கூடுதல் ஆசிரியர்களை நியமித்தல் மற்றும் பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி.
  • எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அவர்களின் கல்வித்திறனை அதிகரிக்க சிறப்பு பயிற்சி வகுப்புகள்.
  • 2005 ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய பாடத்திட்ட கொள்கையின் (NCF) அடிப்படையில் பள்ளி பாடத்திட்டங்கள் மறுஆய்வு செய்யப்பட வேண்டும்.
  • கிராமப்புறம் மற்றும் மலைப்பாங்கான இடங்களில் ஆசிரியர்களுக்கு இருப்பிடவசதி ஏற்படுத்திக் கொடுத்தல்.
  • பெண் ஆசிரியர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படும்.

சமச்சீர் தன்மை

  • தாழ்த்தப்பட்டோர்,பழங்குடியினர் இதர பிற்படுத்தபட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச உணவு/இருப்பிட வசதி.
  • விடுதிகள்/உறைவிடப் பள்ளிகள், ஊக்கத்தொகை, சீருடை ,புத்தகங்கள் மற்றும் மாணவிகளுக்கு தனி கழிப்பிடவசதி.
  • உயர்நிலை பள்ளி அளவில் நன்கு பயிலக்கூடிய/தேவையுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளித்தல்.
  • எல்லா செயல்பாடுகளும் சமச்சீர் கல்வியை அடிப்படையாக கொண்டுள்ளது. அனைத்துப் பள்ளிகளிலும் சிறப்பு தேவை உள்ள மாணவர்களுக்கான வசதிகளைப் பெருக்குதல் அவசியம்.
  • பள்ளிகளில் உயர்நிலை வகுப்பு பயில இயலாதவர்களுக்காக திறந்தநிலை மற்றும் தொலைதூரக்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் அவசியம் இது பள்ளியில் பெற்ற கல்வியை முழுமைப்படுத்தவும் மேம்படுத்தவும் பயன்படும். மேலும் இது பள்ளியில் சேரத் தவறியவர்களுக்கு கல்வி அளிப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.
நிர்வாக சீர்திருத்தங்கள் & ஆதாரம் நிறுவங்களை வலுபடுத்துதல்
  • மத்திய அரசின் நிதியுதவியைப் பெற ஒவ்வொரு மாநிலத்திலும் நிர்வாகச் சீர்திருத்தம் அவசியமாக்கப் படவேண்டும். நிர்வாக சீர்திருத்தங்களைக் கீழே காணலாம்.,
  • பள்ளி நிர்வாகத்தில் சீர்திருத்தங்கள் - நிர்வாகம் மற்றும் பொறுப்புகளைப் பரவலாக்கி பள்ளிகளின் திறனை மேம்படுத்த வேண்டும்.
  • ஆசிரியர் தேர்வு, அவர்களைப் பணியமர்த்துதல், பயிற்சி அளித்தல்,ஊதியம் மற்றும் பணி உயர்வு ஆகியவற்றில் தெளிவான மற்றும் வெளிப்படையான கொள்கைகளை கடைபிடித்தல்.
  • புதுமைப்படுத்தல்/கணிணி நிர்வாகம் மற்றும் அதிகாரப் பரவலாக்குதல் உள்ளிட்ட கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
  • உயர்கல்வி அமைப்பின் அனைத்து மட்டத்திலும் தொழில்சார்ந்த மற்றும் கல்வி உள்ளீடுகளை அளிக்கவேண்டும். அதாவது இது பள்ளி அளவில் இருந்து தொடங்கவேண்டும்.
  • விரைவில் நிதி ஆதாரத்தினைப் பெறவும் அதனை உரிய வழிகளில் செலவழிக்கவும் நிதி கையாளும் வழிமுறைகளை செம்மைப்படுத்த வேண்டும்.
  • பல்வேறு மட்டங்களில் ஆதார நிறுவனங்களை வலுபடுத்துதல் அவசியம். சான்றாக,,
    • தேசிய அளவில் – (என்சிஇஆர்டி (NCERT) (ஆர்ஐஈ உட்பட), என்யூஇபிஏ & என்இஓஎஸ்)
    • மாநில அளவில் – எஸ்சிஆர்டி, மாநில திறந்தநிலைப் பள்ளிகள் & எஸ்ஐஇஎம்ஏடி (SIEMATs),
    • பல்கலைக்கழகங்களின் கல்வியியல் துறை,புகழ்பெற்ற கலை,அறிவியல் & சமூக அறிவியல் கல்லூரிகள்,ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் மூலம் நிதியுதவி பெறும் கல்வியியல் நிறுவனங்கள்.

பஞ்சாயத்துகளின் ஈடுபாடு

திட்டமிடல், செயலாக்கம், கண்காணித்தல மற்றும் மதிப்பிடுதல் முதலியவற்றில் பஞ்சாயத்துராஜ் அமைப்புகள்,உள்ளாட்சி அமைப்புகள்,பெற்றோர்கள்,ஆசிரியர்கள் சமுதாயம் மற்றும் பள்ளி நிர்வாகக் குழு , பெற்றோர்-ஆசிரியர் கழகம் உள்ளிட்ட இதர பங்குதாரர்களின் பங்களிப்பு உறுதி செய்யப்படும்.
மத்திய அரசு உதவிபெறும் 4 திட்டங்கள்:
மத்திய அரசு நிதி உதவிபெறும் 4 திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்துகிறது.
  1. ஐசிடி (தகவல் தொடர்பு தொழில்நுட்பம்) உயர்நிலை & மேல்நிலை வகுப்புகளில் கணிணிக் கல்வி மற்றும் கணிப்பொறி வழிக் கல்வி அளிக்க மாநிலங்களுக்கு நிதி உதவி அளிக்கிறது.
  2. உடலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குகான ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் (IEDC) தன்னார்வ அமைப்புகள் & மாநில அரசுகளுக்கு இக்குழந்தைகளின் கல்வியை மேம்படுத்த நிதி அளிக்கிறது.
  3. உயர்நிலை & மேல்நிலை வகுப்பு மாணவிகளுக்கு உணவு மற்றும் விடுதிகளை மேம்படுத்துதல். கிராமப்புறங்களில் விடுதிகளை நடத்த தன்னார்வ அமைப்புகளுக்கு நிதி உதவி.
  4. பள்ளிகளின் தரம் உயர்த்துதல் யோகா பயிற்சி,அறிவியல் கல்வி, சுற்றுச்சூழல் & மக்கள்தொகைக் கல்வி மற்றும் சர்வதேச அறிவியல் ஒலிம்பியட் முதலியவற்றை மேம்படுத்தல்.
  5. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் படிக்கும்போதே வருவாய் ஈட்ட ஏதுவாக அவர்களை சுயதொழிலுக்கோ அல்லது பகுதிநேர வேலைவாய்ப்பிற்கோ தயார்படுத்த வேண்டும். மாநில/யூனியன் பிரதேச அரசுகள் மாவட்ட/ஒன்றிய அளவில் தொழிற்பயிற்சி மையங்களை ஏற்படுத்த வேண்டும்.
கேந்த்ரிய வித்யாலயா மற்றும் ஜவஹர் நவோதய வித்யாலயா.
கேந்த்ரிய வித்யாலயா மற்றும் ஜவஹர் நவோதய வித்யாலயா பள்ளிகளின் பங்களிப்பை அதிகரிக்கும் பொருட்டு அதன் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

நிதிபங்களிப்புத் திட்டம் மற்றும் வங்கிக் கணக்கு பெறுதல்


  • 11 ஆவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் வடகிழக்கு மாநிலங்கள் நீங்கலாக பிற மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு திட்டங்களின் அனைத்துப் பிரிவுகளையும் செயல்படுத்த மொத்த திட்டமதிப்பீட்டில் 75% தொகையை மத்திய அரசு அளிக்கிறது. வடகிழக்கு மாநிலங்களுக்கு 90% நிதி அளிக்கப்படுகிறது.(மத்திய மாநில பங்களிப்பு உள்ள அனைத்து திட்டங்களிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படும்)
  • 11 ஆவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் திட்டங்களின் அனைத்துப் பிரிவுகளையும் செயல்படுத்த மொத்த திட்டமதிப்பீட்டில் 25% தொகையை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஏற்க வேண்டும். வடகிழக்கு மாநிலங்கள் 10% தொகையை ஏற்க வேண்டும்.(மத்திய மாநில பங்களிப்பு உள்ள அனைத்து திட்டங்களிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படும்)
  • நடைமுறையில் உள்ள சர்வ சிக்ஸா அபியான் திட்டத்தின் மூலம் நிதியினை பயன்படுத்தவும் பரிமாற்றம் செய்யவும் முழுமையான நிதி மேலாண்மை அமைப்பை மாநில அரசு உருவாக்கும். நிதி எங்கு எவ்வாறு செலவழிக்கப்பட்டது என்பதை எளிதில் அறியும் வண்ணம் வெளிப்படையாகவும் திறன்வாய்ந்ததாகவும் அமைக்கப்படும்.
  • இத்திட்ட நிதியை நிர்வகிக்க மாநில, மாவட்ட மற்றும் பள்ளி அளவில் தனித்தனி வங்கிக் கணக்குகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உருவாக்கப்படும். பள்ளி அளவில் தலைமையாசிரியரும் மற்றும் உதவி தலைமையாசிரியரும் இணைந்து வங்கி கணக்கு பெறுவர். மாவட்ட அளவில் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் வங்கிக் கணக்கினை நிர்வகிப்பார்.
  • 12 ஆவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் மத்திய மாநில அரசுகளின் நிதிப்பகிர்வு திட்டம் 50:50 என்று மாறும். வடகிழக்கு மாநிலங்களுக்கு இது 11 மற்றும் 12ஆவது ஐந்தாண்டு திட்ட காலத்திலும் 90:10 என்ற விகிதத்திலேயே இருக்கும்.

பள்ளிகளில் தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் தொழில்நுட்பம்

பள்ளிகளில் தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் தொழில்நுட்பம்

மத்திய அரசால் உருவாக்கப்பட்ட “பள்ளிகளில் தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் தொழில்நுட்பம்” எனும் திட்டம் டிசம்பர் 2004ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பம் குறித்த அறிவினை, திறமையினை வளர்த்துக்கொள்வதும், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் மேல்நிலை கல்விக்கு உதவும் செயல் வகைவழிகளைத் தெரிந்துக் கொள்வதும்தான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். மாணவர்களிடையே உள்ள சமூக, பொருளாதார மற்றும் புவியியல் ரீதியான வேறுபாடுகளை நீக்கி, அவர்களை அறிவுபூர்வமாக ஒன்றிணைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புரட்சிகரமான திட்டமாக இது விளங்குகிறது. மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குப் பலன் தரும் வகையில் கணினி ஆய்வுக் கூடங்கள் அமைத்துக்கொள்ள இத்திட்டம் உதவுகிறது. கேந்திரிய வித்யாலயாவிலும், நவோதயா வித்யாவிலும் புத்தி கூர்மையுடன் கூடிய புத்தொளிர் (SMART) பள்ளிகளை உருவாக்கி அவைகளைத் தொழில்நட்ப மாதிரிகளாக செயல்பட வைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாக அமைந்துள்ளது. மேலும் இதன் மூலமாக அருகிலுள்ள ஏனைய பள்ளிகளுக்கும் தகவல் மற்றும் தொடர்புத் தொழில்நுட்பத் திறமைகளை பரவச்செய்வதும் இத்திட்டத்தின் இலக்காகும்.
இத்திட்டம் தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. கணினி மற்றும் கணினி சார்ந்த பொருட்கள், கல்விசார் மென்பொருள் ஆசிரியர் பயிற்சி மற்றும் இணையதள தொடர்பு போன்றவற்றிற்கான உதவியையும் ஆதரவினையும் தருகிறது.
மாநில மற்றும் பிற நிறுவனங்களுக்கான நிதி உதவி, திட்ட மேற்பார்வை மற்றும் மதிப்பீடு குழுவின் (Project Monitoring and Evaluation group – PM & EG) பரிந்துரை மற்றும் அங்கீகாரத்தின்படி அளிக்கப்படுகிறது. பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிதல் துறையின் செயலர், திட்ட மேற்பார்வை மற்றும் மதிப்பீடுக்குழுவின் தலைவராகச் செயல்படுகிறார்.

இன்றியமையாத புரட்சி

தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பமானது (ICT) சமூக மாற்றத்திற்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் தேவையான ஒரு இன்றியமையாத புரட்சி என்பதை உலகமே ஒப்புக் கொண்டுள்ளது. இருப்பினும் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தின் தயார் நிலையையும் உபயோகமும், உற்பத்தியில் முரண்பாட்டினை ஏற்படுத்தலாம். அது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கவோ மாற்றவோ கூடும்.
சமுதாய மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக முயற்சி செய்கின்ற, போராடுகின்ற நாடுகளுக்குத் தகவல் மற்றும் தொழில் நுட்பத்தைப் புரிந்து கொள்ளுதலும் இயக்குதலும் சிரமமானதொன்றாகும்.
தகவல் மற்றும் தொழில்நுட்ப உபயோகத்தில் இந்தியா மிகப்பெரிய புவியியல் மற்றும் மக்கள் தொகையில் முரண்பாடுகளையுடையதாக இருக்காது. மேலும் இந்திய நாடு உலகின் மிகப்பெரிய தகவல் மற்றும் தொழில்நுட்பச் செயலாற்றல் உடையது. தொழில்நுட்பங்கள் அதிகமுள்ள பெங்களுரு, குர்கான் அல்லது அதிக வருமானமுடைய, வளமுடைய நகரங்களில் தகவல் மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு மிக அதிகமாக உள்ளது. ஆனால் இந்திய நாட்டின் பல இடங்களில் தொலைபேசி தொடர்பு கூட இல்லை.

தேசிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் மேம்பாட்டு குழு

ஜுலை 1998 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இத்துறை, (தகவல் தொழில்நுட்பத் துறை) பள்ளிகள் உட்பட அனைத்துக் கல்லூரி நிறுவனங்களிலும் தகவல் தொடர்பு குறித்த அறிமுகம் அவசியம் என்றுரைத்திருக்கிறது. அது தொடர்பான பத்திகள் பின்வருமாறு.
கணினி சொந்தமாக வாங்க எண்ணும் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளுக்கு உதவியாக கவர்ச்சிகரமான நிதி உதவிகளை அளிக்கும் வித்யார்த்தி கணினி திட்டம், சிஷ்யாக் கணினி திட்டம் மற்றும் பள்ளி கணினி திட்டம் போன்ற திட்டங்கள் தொடங்கப்பட்டன.
இத்திட்டங்கள் வெற்றி பெற ஒன்றோடு ஒன்றிணைந்த பல தொடக்க நிலை முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவை, கணினியின் விலையைக் குறைத்தல், சுலபத் தவணையில் கணினி வாங்க வங்கிக்கடன் தருதல், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் வேறுபல நிறுவனங்கள் நன்கொடையாகத் தரக்கூடிய கணினிகள், அயல்நாடு வாழ் இந்தியர்களின் (NRI) நிறுவனங்கள் அதிக அளவில் தரும் கணினி நன்கொடைகள், மொத்தமாக வாங்கும்போது விலைக்குறைப்பு போன்றனவாம்.
தகவல் தொழில்நுட்பத்தின் தேவையையும் முக்கியத்துவத்தையும் கற்பிப்பது மட்டும் புத்தொளிர் (SMART) பள்ளிகளின் பங்கில்லை. இனிவரும் மில்லேனியம் ஆண்டில் தகவல் தொழில்நுட்பத் துறையின் திறனையும் மதிப்பையும் வெளிப்படுத்தி, ஓரு முன் மாதிரியான பள்ளியாகக் கல்வி நிறுவனமாக அனைத்து மாநிலங்களிலும் விளங்கவேண்டும் என்பது அரசின் நோக்கமாக அமைந்துள்ளது.

குறிக்கோள்கள்

  • தகவல் மற்றும் தொடர்புத் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை கிராமப்புறங்களில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளுக்கு எடுத்துரைத்து விளக்குதல்; அக்கல்வி அவர்களைச் சென்றடைய வழிவகுத்தல்.
  • இணைய தளத்தின் பயன்பாட்டை அதிகரித்தல், தகவல் மற்றும் தொடர்புத் தொழில்நுட்பத்தின் தேவையையும் சேவையையும் கூடுதலாக்குதல்.
  • தனியார் துறையிலும் (STET) சரியான அமைப்புத் திட்டத்தின் மூலம் ஆன்லைனின் (online) தரத்தை அதிகரித்து அதன் பயன்பாட்டைப் பெருக்குதல்.
  • இன்றைய கணினி உலகில் உயர்தர படிப்புக்கும், அதிக ஊதியமுடைய வேலைக்குச் செல்லத் தேவையான, திறமைகளை, வாய்ப்புகளை மாணவர்க்கு ஏற்படுத்தித் தருதல்.
  • சிறப்புத் தேவை அல்லது அதிகத் தேவையுடைய மாணவ மாணவியருக்கு சிறந்த கல்வியை தகவல் மற்றும் தொழில்நுட்பம் மூலம் தருதல்.
  • மாணவர்களுக்குச் சிறப்பான, பகுத்தறியக்கூடிய திறனை சுயமாக படித்துணரும்படிக் கூறுதல். இப்பயிற்சி வகுப்பறைச் சூழலை மாற்றி, ஆசிரியரைக் கருத்தில் அல்லது மையமாக வைத்துப் பாடங்கள் நடத்தப்படாமல், மாணவர்களை மையமாக அல்லது கருத்தில்கொண்டு நடத்தப்படும்.
  • தகவல் மாற்றும் தொடர்புத் தொழில்நுட்பக் கருவிகளின் பயன்பாட்டை தொலைதூரக் கல்வியில் அதிகரிப்பதுடன் பார்க்கவும் கேட்கவும் கூடிய கருவிகளையும் செயற்கைக் கோள்களை அடிப்படையாகக் கொண்ட கருவிகளையும் பயன்படுத்துதல்.

ஆன்லைன் கற்பித்தல் முறை

அறிமுகம்

இந்தியக் கல்விமுறையைப் போன்று, சிறந்த கட்டமைப்பை பிரிட்டன் கல்விமுறை கொண்டிருக்கவில்லை. எனவேதான், அந்நாட்டில் ஆன்லைன் வழி கற்றலுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. பிரிட்டன் மட்டுமல்ல, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கனடா உள்ளிட்ட இதர ஆங்கிலம் பேசும் நாடுகளிலும் இந்தமுறை பின்பற்றப்படுகிறது. இந்தியா போன்ற நாடுகளைச் சேர்ந்த கணிதம் மற்றும் அறிவியல் பட்டதாரிகளுக்கு, நிறுவனங்கள் பயிற்சியளித்து இந்தப் பணியில் ஈடுபடுத்துகின்றன. மேலும், ஆசிரியர்களாக இருப்பவர்களும் இந்த Online Tutoring பணியில் ஈடுபடுகின்றனர். இரவு 9மணி முதல் காலை 7 மணிவரை பணிபுரியும் இந்த Online Tutors, தங்களுக்கான சம்பளத்தை, ஒரு அமர்வுக்கு(Session) இவ்வளவு என்ற முறையில் பெற்றுக்கொள்கிறார்கள்.
இந்த முறையில், பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, எளிமையான முறையில் தங்களது பாடங்களை கற்றுக்கொள்கிறார்கள் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Tutorvista மற்றும் Top Careers & You(TCY) Learning Solutions Pvt. Ltd என்ற 2 நிறுவனங்கள் இதுபோன்ற சேவைகளுக்கு இந்தியாவிலிருந்து இயங்குகின்றன. அதேசமயத்தில், லண்டனைச் சேர்ந்த Bright spark Education என்ற நிறுவனம், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலிருந்து 100 கணித ஆசிரியர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது. இத்துறைக்கு, எதிர்காலத்தில் பெரிய வளர்ச்சி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அமெரிக்கா போன்ற நாடுகளில், ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு முறையான கற்பித்தல் செயல்முறையையும், பாடத்திட்டத்தையும் கொண்டிருப்பதால், அதற்கேற்ப Online Tutors பயிற்சி பெறுகிறார்கள்.

இத்திட்டம் இயங்கும் முறை

ஆசிரியரும், மாணவரும் தங்களுக்கான கணினியில் அமர்ந்து கொள்வார்கள். பொதுவாக, மாணவர்களுக்கு அது பிற்பகல் நேரமாகவும், ஆசிரியர்களுக்கு இரவு நேரமாகவும் இருக்கும். Whiteboard தொழில்நுட்பத்தின் மூலமாக கற்பித்தல் நடைபெறுகிறது. கணிப்பொறி மற்றும் ப்ரொஜெக்டருடன், ஒரு ஊடாடும் வெண்பலகை (Interactive Whiteboard) இணைக்கப்பட்டிருக்கும்.
அந்த ப்ரொஜெக்டர், பேனா, விரல், தொடுஊசி (Stylus) உள்ளிட்ட சாதனங்களைக் கொண்டு ஒரு பயன்பாட்டாளர் கட்டுப்படுத்தக்கூடிய பலகைப் பகுதியில், கணினியின் திரையை வடிவமைக்கிறது. இதன்மூல்ம், ஒரு டியூட்டரும், மாணவரும், தங்களுக்கான உரையாடலை தடையின்றி தொடர முடியும்.
இத்திட்டத்தில் ஒரு மாணவனை ஈடுபடுத்தும் முன்பாக, அவருக்கு முன் அளவீட்டு சோதனை (Pre-assessment Test) வைக்கப்பட்டு, அந்த மாணவனின் பகுப்பாய்வுத் திறன் சோதிக்கப்படும். இதன்மூலம் ஒரு குறிப்பிட்ட பாடத்தில் ஒரு மாணவனின் திறன் அளவு கண்டறியப்படும். ஒரு குறிப்பிட்ட பாடத்தில், குழந்தை திறமையாக இருக்கும் பகுதியும், பலவீனமாக இருக்கும் பகுதியும் கண்டறியப்பட்டு, அதற்கேற்ப, பெற்றோர்களுடன் கலந்துரையாடி திட்டங்கள் வகுக்கப்படும்.
சில வகுப்புகளுக்குப் பிறகு, திறன் அளவீட்டு தேர்வுகள் வைக்கப்பட்டு, அதன்மூலம் கற்பித்தலில் என்னென்ன புதிய தேவைகள் சேர்க்கப்பட வேண்டும் என்று திட்டமிடப்படும். மேலும், இதன்மூலம், குழந்தையின் நிலையை, பெற்றோருக்குத் தெரிவிப்பதற்கான அறிக்கையும் தயாரிக்கப்படும். மேலும், இறுதி அளவீட்டு தேர்வு மற்றும் இறுதி அறிக்கைப் போன்றவை இந்த செயல்பாட்டில் முக்கியமானவை.
இந்த தகவல்தொழில்நுட்ப யுகத்தில்  Online Tutoring போன்ற முறைகள் மக்களிடையே, அதுவும், முன்னேறிய மேலை நாடுகளில் பிரபலமாவது ஆச்சர்யமில்லைதான். மேலும், இந்தப் கல்வி பயிற்சி முறையானது, விஸ்தாரமான முறையில் பாடங்களை அணுக மாணவர்களுக்குப் பயன்படுகிறது என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், முகத்துக்கு நேராக கற்பிக்கும் பழைய முறையே சிறந்தது என்றும், இந்த Online Tutoring முறை துணைநிலை அளவில் உதவக்கூடியது என்றும் பல பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இத்துறையில் ஈடுபட்டிருக்கும் முக்கிய நிறுவனங்கள்

டுடோர்விஸ்டா  என்ற பெங்களூரை அடிப்படையாக கொண்ட நிறுவனம், இத்துறையில் கடந்த 2005ம் ஆண்டே தனது செயல்பாட்டை துவக்கிவிட்டது. இந்நிறுவனம், இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சீனா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் மொத்தம் 2000 ஆசிரியர்களை பணியமர்த்தியுள்ளது. தற்போதைய நிலையில், உலகம் முழுவதும் சுமார் 50 லட்சம் அமர்வுகள்(sessions) இந்த நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகின்றன.
இதைத்தவிர, லண்டனை அடிப்படையாக கொண்ட Bright spark Education என்ற நிறுவனம் இத்துறையில் குறிப்பிடத்தக்க அளவில் ஈடுபட்டு வருகிறது. மேலும், டாப்  சரீரஸ்  &  யு லேர்னிங்  சொலுஷன்ஸ்  பிரைவேட் . ல்டட்   என்ற இந்தியாவை அடிப்படையாகக் கொண்ட நிறுவனமும், இத்துறையில் பெரியளவில் ஈடுபட்டு வருகிறது.

மேலும், கணிதப் பாடத்தைப் பொறுத்தளவில், அதன் ஆசிரியர்களுக்கு இந்தியாவில் பஞ்சமே இல்லை. சராசரி கணித அறிவைவிட, பல இந்தியர்கள் கூடுதலாக கணிதத் திறமையைப் பெற்றிருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கு இத்துறையில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன. மேலும், மேற்கத்திய நாட்டு மாணவர்கள் கணிதத்தை கற்பதற்கு ஆர்வம் காட்டுகின்றனர் மற்றும் அவர்களுக்கு நெருக்கடியும் இல்லை. இந்த நிலை, ஆன்லைன் டுடோர் -களுக்கு நல்ல செய்தி.

குழந்தைகள் பாதுகாப்பில் ஆசிரியர்களின் பங்கு

குழந்தைகள் பாதுகாப்பு

குழந்தைகள் எந்த இடமாக இருந்தாலும் அந்த இடங்களில், அலட்சியம் செய்யப்படுதல், வன்கொடுமைக்கு உள்ளாதல், வன்முறைக்கு உள்ளாதல் தவறாகப் பயன்படுதல் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறார்கள். பள்ளிக்கூடத்திலும் சில விதங்களில் துன்புறுத்தப்படலாம். வீடுகளிலும் இதுபோன்ற கொடுமைகளுக்கு ஆளாகலாம். உங்களது வகுப்பில் படிக்கும் குழந்தை, பள்ளிக்கு வெளியே வன்முறை / துன்புறுத்தப்படல் / சுரண்டப்படுதல் போன்றவற்றிற்கு ஆளாகி இருக்கலாம். நீங்கள் அதை அலட்சியம் செய்யக் கூடாது. சொல்லப்போனால், அவர்களுக்கு நீங்கள் உதவியாக வேண்டும். இது எப்போது உங்களால் முடியும் என்றால், முதலில் இம்மாதிரியான பிரச்சினையால் குழந்தை பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை அடையாளம் காண முடிய வேண்டும். அதைப் புரிந்துகொள்ளத் தேவையான நேரத்தை செலவிட வேண்டும். அவற்றைத் தீர்க்க என்ன செய்யலாம் என்பது பற்றிய வழிமுறை குறித்துச் சிந்திக்க வேண்டும்.
குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டிய உங்களது கடமை என்பது, பள்ளியை விட்டு வெளியில் வரும்வரைதான் என்று நினைக்காதீர்கள். பள்ளி வாழ்க்கையைப் பெற முடியாத குழந்தையின் வாழ்க்கையில் உங்களுடைய தலையீடு மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவர முடியும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதற்காக உங்களுடைய மனதைத் தயார் நிலையில் வைக்க வேண்டியதுதான். அவர்களுடைய பிரச்சினையைக் குறித்து அதிகமாக அறிந்துகொள்ளவும் அவற்றைத் தீர்ப்பதற்கு உங்களால் என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி யோசிக்கவும் வேண்டும். நீங்கள் மானசீகமாக முடிவு செய்தால், அந்தப் பிரச்சினை தீரத் தேவையான ஏற்பாடுகள், வழிமுறைகள் ஆகியவற்றை உருவாக்க முடியும். இதனால், உங்களால் செய்ய முடியும் என்று கனவிலும் நீங்கள் நினைக்காத காரியங்களைச் சாதிக்க முடியும்.

நீங்கள் குழந்தைகளுடன் நட்புணர்வுடன் பழகும் ஆசிரியரா?

கீழ்க்கண்டவாறு நடந்து கொண்டால், அவ்வாறான ஆசிரியராக உங்களால் ஆக முடியும்.
  • குழந்தைகளுக்கான உரிமைகளும் மனித உரிமைதான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இது போன்றப் புரிதலை, நீங்கள் இருக்கும் சமுதாயத்தில் உருவாக்குங்கள்.
  • உங்களுடைய வகுப்புகள் நடக்கும்போது அதில் இருப்பது மிகுந்த பயனளிக்கக் கூடியது என்பதைக் குழந்தைகள் உணருமாறு செய்யுங்கள்.
  • புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் திறந்த மனதுடன் இருங்கள்
  • குழந்தைக்கு, நண்பனாகவும் ஆசானாகவும் வழிகாட்டியாகவும் இருங்கள்.
  • சுவையாகப் பாடம் எடுங்கள். மாணவர்களுக்குப் பயனுள்ள பல தகவல்களைச் சொல்லுங்கள்
  • நீங்கள் மட்டுமே பேசிக்கொண்டிருக்காமல், குழந்தைகள் கேள்விகள், சந்தேகங்கள் கேட்பதற்கு வாய்ப்புகளை உருவாக்குங்கள்.
  • துன்புறுத்தப்படுவது, உதாசீனப்படுத்தபடுவது, கற்றுக்கொள்வதில் சிரமங்கள் இருப்பது போன்ற பல குறைபாடுகளை அறிந்து உணரப் பழகுங்கள்.
  • குழந்தைகள் தங்களது அபிப்பிராயங்கள், கவலைகள், பயன்கள் சோகங்கள் போன்ற பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அவர்களோடு பழகுங்கள். அவர்களோடு சாதாரண விஷயங்களைப் பற்றியும் கலந்து பேசுங்கள்.
  • நன்றாக கவனிக்கக் கற்றுக்கொள்ளுங்கள், குழந்தைகள் பள்ளியிலும் தங்களது வீடுகளிலும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் பிரச்சினைகளைப் பற்றி அவர்களுடன் விவாதியுங்கள்.
  • மாணவ மாணவியரின் வாழ்க்கையைப் பாதிக்கக்கூடிய விஷயங்களைப் புரிந்துகொள்ளச் செய்யுங்கள்.
  • இம்மாதிரியான சந்தர்ப்பங்களில், பயன் ஏற்படுத்தும் வகையில் அவர்கள் கலந்துகொள்ள அவர்களது திறமைகளை வளர்த்துக்கொள்ளச் செய்யுங்கள்.
  • பள்ளியின் நிர்வாகத்தினருடன், மாணவர்களைக் கலந்துரையாடச் செய்யுங்கள் அதற்கான கூட்டங்களை ஏற்பாடு செய்யுங்கள்.
  • பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டங்களில் குழந்தைகளுக்கு என்று இருக்கும் உரிமைகளைப் பற்றி விவாதம் ஏற்பாடு செய்யுங்கள்.
  • உடல் ரீதியான தண்டனைகளைத் தரக் கூடாது என்று தீர்மானியுங்கள். எதுவாக இருந்தாலும், பேசிப் புரியவைப்பது, ஆற்றுப்படுத்தல் போன்ற முறைகளைக் கையாண்டு குழந்தைகளுக்குக் கட்டுப்பாடு ஏற்படுவதன் அவசியத்தைப் புரியவையுங்கள்.
  • பாரபட்சம் காட்டப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவியுங்கள். சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவர்கள், பாரபட்சம் காட்டப்படும் குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஆகிய குழந்தைகளோடு நல்ல உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
  • வேலை செய்யும் சிறுவர்களைப் பற்றி எதிர்மறையாகச் கூறப்படுவதைத் தடுத்து நிறுத்துங்கள். அதே போல, தெருவோரச் சிறுவர்கள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தைகள், கடத்தல்கள், இல்லங்களில் நிகழ்த்தப்படும் வன்முறைகள், குழந்தைகள் கொடுமைப்படுத்தப்படல், சட்டத்துக்கு எதிரான செயல்களைச் செய்யும் குழந்தைகள் போன்ற பாதுகாப்புத் தேவைப்படும் பல குழந்தைகள் எதிர்மறையான உதாரணங்களாக மாற்றப்படுவதைத் தடுத்து நிறுத்துங்கள்.
  • உங்களது வீடு மற்றும் வேலை செய்யும் இடங்களில் குழந்தைத் தொழிலாளர்களைப் பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.
  • ஜனநாயக முறையில் செயல்படும் அதே நேரத்தில் கட்டமைப்பு இல்லாத வகையில் செயல்படாதிருங்கள்.
  • குழந்தைகளைப் பள்ளியில் மட்டுமின்றி, அவர்களது சமூகங்களிலும் துன்புறுத்தாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
  • அப்படி நிகழக்கூடிய சூழ்நிலை எழுந்தால், காவல்துறையை அழைக்கவோ/சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவோ தயங்காதீர்கள்.
  • குழந்தைகள் தங்களது கருத்துகளை, அவர்கள் சார்ந்த சமூகங்களின் பெரியவர்களிடம் எடுத்துக்கூறுமாறு ஊக்கப்படுத்துங்கள்.
  • நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யயும் பொறுப்பைக் குழந்தைகளுக்குத் தாருங்கள் அவர்களுக்குப் பொறுப்புகளைத் தந்து அவற்றை நிறைவேற்ற வழிகாட்டுங்கள்.
  • குழந்தைகளைப் பக்கத்தில் இருக்கும் முக்கிய இடங்கள், மற்றும் சுற்றுலாத் தலங்கள் ஆகியவற்றிற்குக் கூட்டிச் செல்லுங்கள்.
  • குழந்தைகளைக் கலந்துரையாடல்கள்/விவாதங்கள்/கேள்விபதில் நிகழ்ச்சிகள் மற்றுமுள்ள அர்த்தமுள்ளப் பொழுதுபோக்கு அம்சங்களில் கலந்துகொள்ளுமாறு ஊக்கப்படுத்துங்கள்.
  • புது விதமான முறைகளில், பெண் குழந்தைகள் கல்வி கற்பது, வகுப்பறைகளில் மனம் ஒன்றிக் கலந்துகொள்வது போன்றவற்றை உறுதிசெய்யுங்கள்.
  • பாதியில் பள்ளிப்படிப்பை நிறுத்தும் பெண்கள், வகுப்புக்கு அடிக்கடி விடுப்பு எடுக்கும் பெண்களைப் பற்றி அறிந்து அவ்வாறு அவர்கள் தொடர்ந்து விடுப்பு எடுக்காமல் இருக்க வழி செய்யுங்கள்.
  • குழந்தைகளைச் சுற்றி ஒரு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க அனைத்து ஆசிரியர்களும் முனைந்து உதவி செய்தால் நிச்சயம் முடியும்.
  • உங்களது கவனிக்கும் திறன்தான் மிகவும் முக்கியமானது. கூர்ந்து கவனித்தால்தான் உங்கள் வகுப்பில் உள்ள குழந்தைகளின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் சரியான முறையில் மதிப்பீடு செய்ய முடியும். எதாவது பிரச்சினை இருப்பதை உங்களால் கண்டறிய முடிந்தால், அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று ஆராய்ந்து அறிவதுதான் உங்களது அடுத்த கட்டப் பணியாக இருக்க வேண்டும்.
  • இதற்கு அடுத்தாக, பிரச்சினை இருக்கும் குழந்தை குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் போன்றவர்கள் மூலமாக எந்த விதத்திலாவது நெருக்குதலுக்கு ஆளாகி இருக்கிறதா என்று கேள்வியைக் கேட்டுக்கொண்டு, அதற்கான விடை தேடுங்கள்.
  • குழந்தைன் பிரச்சினைகளை எவ்வகையிலாவது வெளிப்படுத்தச் செய்யுங்கள். எழுத்து மூலமோ, வர்ணம் தீட்டுதல், ஓவியம் தீட்டுதல், அல்லது கதை எழுதுதல் ஆகியவற்றின் மூலம் குழந்தை தனது பிரச்சினைகளை வெளிப்படுத்த ஊக்கப்படுத்துங்கள். உங்களிடமோ பள்ளி மனநல ஆலோசகரிடமோ நண்பரிடமோ சமூக சேவகர் போன்றவரிடமோ பேசச் செய்யுங்கள்.
  • குழந்தைகளின் வயது, மனமுதிர்ச்சி ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, பாலியல் கல்வியைப் பயிற்று வைக்க முடியுமா என்று பாருங்கள்.
  • குழந்தைகளிடத்தில் எச்ஐவி/எய்ட்ஸ் பற்றிய தகவல்களைக் கூறுங்கள். இந்த நோய் தனி நபரை எப்படிப் பாதிக்கிறது மற்றும் பரவுகிறது என்பதைப் பற்றித் தெரிவியுங்கள். இவை வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரிவியுங்கள்.
  • வகுப்பறையில், நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள், நோயினால் அவதிப்படுபவர்கள் ஆகியோர் எந்த விதத்திலும் முத்திரை குத்தப்படாமல், தனிமைப்படுத்தப்படாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
  • குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்குவது, வலுப்படுத்துவது ஆகியவை பல நிலைகளில் இருந்து பணியாற்ற வேண்டிய தேவையுள்ள ஒரு செயலாகும். இதற்காக, பேச்சுவார்த்தை, கூட்டு சேர்வது, ஒருங்கிணைப்பு, அதுவும் இரு தரப்பினருக்கும் தெரிந்தவற்றைப் பகிர்ந்துகொண்டு இதைச் செய்வது, போன்றவை அவசியமாகும்.
  • இவற்றைச் செய்யும்போது மரபு ரீதியான செயல்பாடுகள், அணுகுமுறைகள் போன்றவை அவசியம். அடிப்படைத் தேவைகளான சேவைகளைச் செய்து தருவது, அவற்றைக் கண்காணிப்பது போன்றவை மட்டுமின்றி அவர்களது முன்னேற்றங்களுக்காகச் செயல்படும் தனி நபர்களை அடையாளம் கண்டுகொள்வது ஆகியவற்றையும் செய்ய வேண்டும்.
  • அரசாங்கம் குழந்தைகளுக்காக வகுத்துள்ள திட்டங்கள் என்ன, அவை மூலம் என்ன பயன்கள் என்பதை ஆசிரியர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். அரசாங்கத்தின் இத்தகைய திட்டங்களால் பயன்பெறக்கூடிய நிலையில் இருக்கும் குழந்தைகள் மற்றும் குடும்பங்களை அடையாளம் காண வேண்டும். இம்மாதிரியான குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் பட்டியலை உங்களது பகுதியில் உள்ள வட்டார, தாலுகா, மண்டல பஞ்சாயத்து உறுப்பினர் அல்லது பிடி பிஓ ஆகியவர்களில் யாரிடம் வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம். நீங்கள் பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கும் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டுமென்றால், கீழ்க்காணும் அரசாங்க அதிகாரிகளுடன் தொடர்பு வைத்திருப்பது அவசியம்.
  • காவல்துறை
  • உங்களது பஞ்சாயத்து / முனிசிபாலிடி, நகராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்.
  • அங்கன்வாடி ஊழியர்கள்
  • ஏஎன்எம்எஸ்
  • வட்டார / தாலுகா / மண்டல மற்றும் ஜில்லா பஞ்சாயத்து உறுப்பினர்கள்.
  • வட்டார வளர்ச்சி அதிகாரி (பிடிஓ) அல்லது வட்டார வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து அதிகாரி
  • மாவட்ட நீதிபதி / மாவட்ட ஆட்சித்துறைத்தலைவர்
  • உங்களது பகுதிக்கு அருகில் உள்ள குழந்தைகள் நலக் கமிட்டி அலுவலகம் அல்லது அலுவலர்.
  • உங்களது பகுதியில் உள்ள குழந்தைகளுக்கான உதவிக் தொலைபேசித் தொடர்பகம் அல்லது இயக்கம்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகளை அடையாளம் காணும் வழிகள்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தைகள் மற்றும் விடலைப் பருவத்தினரிடம் காணப்படும் அடையாளங்கள்

சிறுமிகள்
6-11வயதுவரை
12-17வயதுவரை

மற்ற குழந்தைகளுடன் பழகும்போது நடத்தையில் பாலுணர்ச்சி வெளிப்படையாகத் தெரிவது.
தன்னைவிட வயது குறைவான குழந்தைகளுடன் பாலியல் நோக்கத்துடன் பழகுதல், அவர்களைத் தன் விருப்பத்துக்கு இணங்கவைக்க முயலுதல்

தான் அனுபவித்த பாலியல் வன்கொடுமையை விவரித்தல்.
நடத்தையில் பாலுணர்வு வெளிப்படுதல் அல்லது பாலுணர்வு பற்றிய விஷயங்களை முழுவதுமாகத் தவிர்த்தல்

அந்தரங்க உறுப்புகளைப் பற்றி அளவுக்கு அதிகமாக அக்கறை காட்டுவது
உணவு உட்கொள்வதில் சிக்கல்கள்

தன்னைவிட வயதில் மூத்தவர்களைப் பாலியல் ரீதியாக அடையாளம் காணுதல் மற்றும் உறவு முறை குறிப்பிடுதல்
குற்ற உணர்வு வெட்கம், அவமானம் ஆகிய உணர்வுகளிடமிருந்து தன்னை விலக்கிவைத்துக்கொள்ளும் முயற்சிகள்

திடீரென்று பெண்கள், ஆண்கள் அல்லது குறிப்பிட்ட இடங்கள் குறித்த பயத்தை அல்லது அச்சத்தை வெளிப்படுத்தல்
வீட்டை விட்டு ஓடிவிடுதல்

பெரியவர்களின் பாலியல் நடத்தைகளைப் பற்றி வயதுக்கு மீறிய விஷயங்களைத் தெரிந்து வைத்திருத்தல்


தூக்கத்தில் பிரச்சினைகள், மாற்றங்கள் கெட்ட கனவுகள் மற்றும் பயமுறுத்தும் கனவுகளால் பீதியடைதல்

சிறுவர்கள்
6-11வயதுவரை
12-17வயதுவரை

மற்ற குழந்தைகளுடன் பழகும்போது நடத்தையில் பாலுணர்ச்சி வெளிப்படையாகத் தெரிவது.
தன்னைவிட வயது குறைவான குழந்தைகளுடன் பாலியல் நோக்கத்துடன் பழகுதல், அவர்களைத் தன் விருப்பத்துக்கு இணங்கவைக்க முயலுதல்

ஆண்கள், பெண்கள் அல்லது குறிப்பிட்ட இடங்களைக் குறித்து திடீரென்று பயப்படுதல்
திடீரென்று குழந்தைத்தனமாக நடந்துகொள்ளுதல்

தூக்கத்தில் பிரச்சினைகள், கெட்ட கனவுகள் மற்றும் பயமுறுத்தும் கனவுகளால் பீதியடைதல்.
குறிப்பிட்ட நபர்களைப் போல நடந்துகொள்ளுதல், வேண்டுமென்றே ஆபத்தான காரியங்களில் ஈடுபடுதல்.

திடீரென்று முரட்டுத்தனமாக நடந்துகொள்வது அல்லது குறிப்பிட்ட நபர் போல நடித்துக்கொள்ளுவது.
குற்றஉணர்வு, வெட்கம், அவமானம் ஆகிய உணர்வுகளிடமிருந்து தன்னை விலக்கிவைத்துக்கொள்ளும் முயற்சிகள்

ஏற்கனவே பிடித்த விஷயங்கள் பிடிக்காமல்போவது


குழந்தைதனமான நடத்தைகளை வெளிப்படுதல்

முன்னெச்சரிக்கை: மேலே குறிப்பிட்ட அடையாளங்கள், அல்லது அறிகுறிகள் ஆகியன ஒரு குழந்தை பிரச்சினையில் மாட்டிக்கொண்டிருக்கிறது, அதன் காரணம், பாலியல் வன்கொடுமையாக இருக்கலாம் என்பதைத் தெரியப்படுத்தும் அறிகுறிகள்தாம். இவற்றில் ஏதாவது ஒன்றிரண்டு அறிகுறிகள் ஒரு குழந்தையிடம் தென்பட்டால், அக்குழந்தையின் மேல் பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்டு இருக்கிறது என்று முடிவுக்கு வரக் கூடாது. பல அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் ஆகியன இருந்தால் மட்டுமே, இம்மாதிரியான முடிவுக்கு வர வேண்டும். இதில் உங்களது உள்ளுணர்வு கூறுவதை மதியுங்கள்.
ஆதாரம்: யுனிசெஃப், கற்றுக்கொள்வதைப் பற்றி ஆசிரியரின் உரை ((http://www.unicef.org/teachers/ Last revised April, 1999) - ஐ. லேத்: குழந்தைகள் பாதுகாப்பு)
குழந்தைகள் எப்போதுமே, பெரியவர்கள் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும். கீழ்ப்படிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுத்தான் வளர்க்கப்படுகிறார்கள் பெரியவர்களின் நடத்தைகள் பிடிக்காத போதும், இவ்வாறுதான் நடக்க வேண்டும் என்ற படம் படிகிறது. தங்களுக்குப் பிடிக்காத அல்லது ஏற்றுக்கொள்ளமுடியாத வகையில், வயதில் மூத்தவர்கள் நடந்துகொள்ளும்போது அதை மறுப்பதற்குக் குழந்தைகள் மறந்துவிடுவார்கள். இத்தகைய சூழ்நிலையில், முடியாது என்று சொல்லக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

உடலில் குறைபாடு உள்ள குழந்தைகளிடம் நடந்துகொள்ள வேண்டிய முறை குறித்த பத்துக் கட்டளைகள்

(1) உடலில் குறைபாடு உள்ள குழந்தைகளை, 'முடியாதவன்' 'முடங்கி இருப்பவன்' 'ஊனமுற்றவன்' என்று எதிர்மறையாகக் குறிப்பிடுவதற்கு பதில் உடலில் குறைபாடு உள்ள, அல்லது நடமாடுவதில் குறைபாடு உள்ள குழந்தை என்று கூறலாம். 'சக்கர நாற்காலியில் முடங்கியிருப்பவர்' என்பதற்குப் பதிலாக, சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் குழந்தை' என்று குறிப்பிடலாம். 'செவிடு, ஊமை' என்பதற்குப் பதிலாக, 'கேட்பதிலும் பேசுவதிலும் பிரச்சினை உள்ள குழந்தை' என்று கூறலாம் மன வளர்ச்சி குன்றியவன் என்பதற்குப் பதிலாக மூளைச் செயல் பாட்டில் குறைபாடு உள்ள குழந்தை என்று கூறலாம்.

  1. குறைபாடுகள் உள்ள குழந்தைகளை, குறைபாடுகள் ஏதும் இல்லாத குழந்தைகளோடு ஒன்றிணைத்து சமமான நிலையில் வைத்துக் குறிப்பிடுங்கள். உதாரணமாக உடல் குறைபாடு உள்ள ஒரு மாணவன், தன்னைவிட வயது குறைவான, குறைபாடுகள் எதுவும் இல்லாத குழந்தைக்குப் பாடங்கள் சொல்லிக்கொடுக்க முடியும், உடல் குறைபாடுகள் உள்ள குழந்தைகள் அவ்வாறான குறைபாடுகள் இல்லாத குழந்தைகளுடன், எந்தெந்த விதங்களில் பழக முடியுமோ, அத்தனை விதங்களிலும் பழக வேண்டும்.
  2. குறைபாடுகள் உள்ள குழந்தைகளை, தங்களது எண்ணங்களை, உணர்வுகளைச் சுதந்திரமான முறையில் வெளிப்படுத்த வாய்ப்புக் கொடுங்கள் கல்வி மற்றும் பள்ளி சம்பந்தமான திட்டங்கள், செயல்பாடுகளில் குறைபாடுள்ள குழந்தைகளுடன் அவ்வாறான குறைபாடுகள் குழந்தைகளுடன் சேர்த்துப் பணியாற்ற அனுமதியுங்கள்.
  3. குழந்தைகளை நல்லமுறையில் கவனித்து, அவர்களிடம் உள்ள குறைபாடுகளை கவனித்து அறிந்துகொள்ளுங்கள். குறைபாடுகளை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதும் இளம் வயதில் கல்வி கற்பதின் ஒரு பகுதிதான். குறைபாடுகளை எந்த அளவுக்கு விரைவாகக் கண்டுபிடிக்கிறோமோ அந்த அளவுக்கு விரைவாகவும் பலனுள்ள வகையிலும் சிகிச்சை அளிக்கவும் குறைபாடுகளின் கடுமையைக் குறைக்கவும் முடியும்.
  4. குறைபாடுகளைக் கண்டுபிடிக்க முடிந்த பின்னர், தகுந்த சிகிச்சை, பரிசோதனைகள் போன்றவற்றிற்கு ஏற்பாடு செய்யுங்கள்.
  5. குறைபாடுகள் உள்ள குழந்தைகள் பயன்படுத்துவதற்கு, புரிந்து கொள்வதற்கு ஏற்ற வகையில், பாடங்கள் கற்றுக்கொள்ளப் பயன்படும் உபகரணங்கள் மற்றும் வகுப்பறைகள் ஆகியவற்றை மாற்றி அமைக்க முயற்சி செய்யுங்கள். கண்பார்வை குறைபாடுள்ள குழந்தைக்கு, பெரிய எழுத்தில் எழுதிப் பாடங்களைக் கற்பிப்பது, முன்னால் உட்காரவைப்பது போன்றவற்றைச் செய்யலாம். நடமாடுவதில் பிரச்சினை உள்ள குழந்தை எளிதாக நுழையும் விதத்தில் வகுப்பறையை மாற்றி அமையுங்கள். குறைபாடுகள் குறித்த நேர்மறை எண்ணங்களை மாணவர்கள் மனத்தில் உருவாக்கும் விதத்தில் பாட முறைகள், விளையாட்டு, மற்றும் இதர நடவடிக்கைகளில் மாற்றம் செய்யுங்கள்.
  6. குறைபாடுகள் உள்ள குழந்தைக்கு எந்த வகையான சிறப்பான தனித் தேவைகள் இருக்கும் என்பது பற்றி, அவர்களின் பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருக்குத் தெரியப்படுத்துங்கள். பெற்றோர்களிடத்தில் தனியாகவும் பொது நிகழ்ச்சிகளிலும் இவற்றைப் பற்றி உரையாடுங்கள்.
  7. (8) தங்கள் குழந்தையின் குறைபாட்டால் விரக்தி அடைந்திருக்கும் பெற்றோர்களிடத்தில், அத்தகைய குழந்தைகளை எப்படிச் சரியான விதத்தில் கையாள முடியும் என்பது குறித்த எளிய வழிமுறைகளைக் கற்றுக்கொடுங்கள். பொறுமையைக் கடைப்பிடிக்கவும், கோபத்தால் அக்குழந்தைகளைத் துன்புறுத்துவதைத் தவிர்க்கவும் அவர்களுக்கு உதவுங்கள்.
  8. உடல் குறைபாடுகள் உள்ள குழந்தையின் உடன் பிறந்தவர்களும் இதர குடும்ப உறுப்பினர்களும் எப்படி நடந்துகொண்டால் பெற்றோர்களின் விரக்தி, மன வேதனை ஆகியவற்றைக் குறைக்கலாம் என்பது பற்றி வழிகாட்டுங்கள்.
  9. உடல் குறைபாடுள்ள குழந்தைகளின் பெற்றோர்களைப் பள்ளி சம்பந்தப்பட்ட செயல்பாடுகள், திட்டங்களை முடிவு செய்யும் பணியில் முழுமையாக ஈடுபடுத்துங்கள்.
  10. ஆதாரம் யுனிசெஃப், கற்றுக்கொள்ளும் முறைகளைப் பற்றிய ஒரு ஆசிரியரின் உரை.

செயல்வழிக் கற்றல் கற்பித்தல்

முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு

மொழிப் பாடங்களையும் ஏனைய பாடங்களையும் ஏணிப்படி மூலம் கற்றல் ஒரு புதிய முயற்சி, முக்காலத்திலிருந்து கற்றலை எளிமை படுத்துவதற்கு நிறைய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி கல்வித்துறை மூலம் அனைத்து பாடங்களையும் நன்றாக வடிவமைக்கப்பட்ட அட்டைகள் மூலம் ஏணிப்படி முறையில் முயற்சி UNICEF உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் ஏணிப்படி முறை தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தின்படி அண்மையில் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பிற்குத் தயாரிக்கப்பட்டது.
Montessori முறையில் கற்பித்தல் மழலையர் வகுப்பிற்கு என நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. ரூபாய் 30 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவும். உபகரணங்கள் வாங்கவும் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 20 வழைலையர் பள்ளிகள் (ஒரு மண்டலத்திற்கு 3 வீதம்) செயல்பட்டு வருகிறது.
முதல்படி
செயல் வழிக் கற்றல் அட்டைகள் மாநில கருத்துறையாளர்கள் மாநகராட்சி மேற்பார்வையாளர்கள், ஆசிரியர்கள், DIET மற்றும் DTERT துறையாளர்கள் தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலைக் கல்வி வகுப்பு ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கு தயாரிக்கப்பட்டது.
இரண்டாம்படி
  • ஒரு மண்டலத்திற்கு ஒரு மாதிரிப்பள்ளி என பத்து மண்டலத்திற்கு மாநில கருத்துறையாளர்கள், மாநகராட்சி மேற்பார்வையாளர்கள், மற்றும் ஆசிரியர்கள், சூழ்நிலைக் கல்வி வகுப்பு ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கு தயாரிக்கப்பட்டது.
  • ஒரு மண்டலத்திற்கு ஒரு மாதிரிப்பள்ளி என பத்து மண்டலத்திற்கு பத்து மாதிரிப்பள்ளிகளோடு ஏற்கனவே உள்ள மூன்று மாதிரிப் பள்ளிகளையும் சேர்த்து 13 மாதிரிப்பள்ளிகளாக 2003ஆம் ஆண்டு செயல் வழிக் கற்றலில் அப்பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. மண்டலத்திற்கு 10 ஆசிரியர்கள் வீதம் பத்து மண்டலங்களில் 100 ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களைக் கருத்துறையாளர்களாக நியமித்து 1 முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
  • சென்னை தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் ஏறக்குறைய 1 லட்சம் குழந்தைகள் பயின்று வருகின்றன. அவர்களின் 30 ஆயிரம் குழந்தைகள் 1 மற்றும் 2ஆம் வகுப்புகளில் உள்ளனர். தற்போது செயல் வழிக் கற்றல் முறை அட்டைகள் UNICEF மற்றும் சென்னை மாநகராட்சி நிதி உதவியோடு பல வண்ணங்களில் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்க தயார் நிலையில் உள்ளன. 3-மற்றும் 4ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அட்டைகள் தற்போது அச்சிடப்பட்டு வருகிறது.
  • செயல்வழிக் கற்றல் அட்டைகள் பற்றிய தங்களுடைய மேலான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. சென்னை தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் தங்களுடைய பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

கணினி வழிக் கல்வி

  • சென்னை மாநகராட்சிப் பள்ளிகளுக்கு 500-க்கும் மேற்பட்ட கணினிகளை சென்னை மாநகராட்சி வழங்கியுள்ளது. சில பள்ளிகளில் L.C.D திரைக் கருவியும் உள்ளது Intel Asia என்ற நிறுவனம் 15 சென்னைப் பள்ளிகளுக்கு "Smart Schools" என்ற திட்டத்தை செயல்படுத்தி கணினி வழிக் கற்றல்-கற்பித்தல் நடைபெற்று வருகிறது.
  • Teach India எனப்படும் நிறுவனம் 40 பள்ளிகளில் 6 முதல் 8 வகுப்புகளுக்கு 500 இரண்டாம் தர (உபயோகிக்கப்பட்ட) கணினிகளை வழங்கியுள்ளது.

செயல் வழிக் கற்றல் கற்பித்தல்

  1. சென்னை மாநகராட்சிக் கல்வித்துறையானது பல்வேறு புதுமையான திட்டங்கள் மூலம் தரமான மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் மாணவர் எண்ணிக்கையினை உயர்த்தவும், இடைநிற்றலை குறைக்கவும், மாணவர்களை தக்க வைக்கவும்.
  2. "அனைவருக்கும் கல்வி இயக்கம்" சார்பில் தரமான கல்வியினை வழங்குவது மிக்க சவாலான பணியாக உள்ளது. குழந்தைகள் நாட்டின் சொத்து.
  3. இந்த முறையில் கற்றல், கற்பித்தலை எளிமையாக்குவது மட்டுமல்லாமல் இயற்கையாகவும் அர்த்தமுள்ளதாகவும் நடைபெறுகிறது. சொற்களின் சரியான உச்சரிப்புகளைக் கற்றல் மாணவர்களின் சுற்றுப்புற சூழ்நிலையை ஏற்படுத்தப்படுகிறது. கற்றல் என்பது கேட்டல், பேசுதல், படித்தல் மற்றும் எழுதுதல் போன்ற திறன்களைச் கொண்டவை. இவையே மிகப்பெரிய நான்கு தூண்களாக இருக்கின்றன. ஒரு தூண் இல்லா விட்டாலும் அது மிகப்பெரிய சேதத்தைக் கற்றல் வடிவத்திற்கு ஏற்படுத்துகின்றது. அதே போன்று இந்த நான்கு திறனில் ஏதாவது ஒன்றை விட்டுவிட்டால் கற்றலில் இவை பெரிய சேதத்தை ஏற்படுத்துகின்றது. எனவே மிகக் கவனமுடன் இந்தத் திறன்களை கற்கவேண்டும். தனியான படங்கள் ஒவ்வொரு கற்றல் நிகழ்விற்கும் கொடுக்கப்பட்டுள்ளன.
  4. தமிழில் விலங்குகளிதிற்கு ஏற்படுத்துகின்றது. அதே போன்று இந்த நான்கு திறனில் ஏதாவது ஒன்றை விட்டுவிட்டால் கற்றலில் இவை பெரிய சேதத்தை ஏற்படுத்துகின்றது. எனவே மிகக் கவனமுடன் இந்தத் திறன்களை கற்கவேண்டும். தனியான படங்கள் ஒவ்வொரு கற்றல் நிகழ்விற்கும் கொடுக்கப்பட்டுள்ளன.
  5. தமிழில் விலங்குகளின் பெயர்கள் பறவைகளின் பெயர்கள், கணிதம், வண்டிகளின் பெயர்கள், ஆங்கிலத்தில் பூச்சிகளின் பெயர்கள், சுற்றுச்சூழல் கல்வி போன்ற வடிவில் கற்றல் நிகழ்கிறது. இந்தக் குறியீடுகள் கற்றலின் படிகளாக கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மைல்கல் பூஜ்யம் மைல்கல் எனப்படுகிறது. இந்த பூஜ்யம் மைல்கல்லானது குழந்தைகள் கற்றலை பெற்றுக்கொள்வதற்கான தயார் நிலையை ஏற்படுத்துகிறது. குறைந்தது பத்து நாட்களில் ஒவ்வொரு மைல்கல்லாக ஒவ்வொரு வகுப்பிற்கும் முடித்துவிடலாம். முதலாம் வகுப்பில் கற்றதை மீள்பார்வை செய்தல் ஆகும்.
  6. கீழ்கண்டபயிற்சிகள் கற்றல் கற்பித்தல் முறையில் சேர்க்கப்பட்டுள்ளது. கவனித்தல், பேசுதல், படித்தல், எழுதுதல் மேற்கண்ட கற்றல் முறையில் நேர்த்தியான கற்றல் நடப்பதற்காக நிறைய செயல்கள் அறிவுறுத்தப்ப்டுகின்றன. இந்தச் செயல் முறைகள் மிகவும் கவனமாக இந்த வயதுடைய குழந்தைகள் எளிதில் உள்வாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவைகள் படிப்படியாக இயற்கையான வரிசையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் செயல் முறைகள் அட்டையில் கொடுக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்களும் மாணவர்களும் இவற்றை எளிதாகவும் நேர்த்தியாகவும் உபயோகிக்க முடிகிறது. அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் தானாகவே கற்றுக்கொள்ளும் வகையில் இந்தச் செயல் முறைகள் உள்ளன. ஒவ்வொரு அட்டையில் உள்ள செயல்களை முடிக்கும் பொழுது அவர்களுக்கு மனநிறைவையும் சாதிக்கும் திறனையும், சந்தோசத்தையும் தருகின்றது. வேகமாகச் கற்கும் குழந்தைகள் வேகமாகக் கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மெதுவாகக் கற்கும் குழந்தைகள் அவர்களின் வேகத்திற்கு ஏற்ப எந்தத் தடையும் இன்றி கற்கலாம்.
  7. அவர்கள் படிப்படியாகக் கற்கும் போது என்ன கற்கின்றோம். பின்னர் என்ன கற்கவேண்டும் என்பது தெரிகின்றது. இந்தக் கற்பித்தல்படி ஆசிரியர் எதையும் விட்டு விட முடியாது. கட்டாயமாக அந்தப் படியின்படி செல்ல வேண்டும். நீண்ட நாட்கள் விடுப்பு எடுக்கும் குழந்தைகள் கற்பதற்கு ஏற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் கற்றலை கடைசியாக பள்ளியில் எங்கே விட்டார்களோ அங்கேயே தொடரமுடியும் மதிப்பீடு செய்தல் ஒரு தொடர்நிகழ்வு. அவர்கள் எவ்வளவு கற்றனர் என்பதை அறிந்துக்கொள்ள மதிப்பீடு அட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளது. படம் வரைந்த மதிப்பீடு அட்டைகள் வழங்குவதால் மாணவர்கள் உற்சாகத்துடன் செயல்படுகின்றனர். எனவே மதிப்பீடு செய்தலை ஒரு சுமையாக எண்ணுவதில்லை. ஆனால் அதை ஆர்வமுடைய செயல்பாடகக் கருதுகின்றனர். மதிப்பீடு மேலும் அவ்வப்போது செய்யப்படுகின்றன. ஒரு வருடத்தில் மூன்று முறை தேர்வுகள் நடைபெறுகின்றன.
  8. முத்திரைகள் இரண்டு வகையாகப் பிரிக்க படுகின்றன. அவை பொதுவான முத்திரைகள் மற்றும் குறிப்பிட்ட முத்திரைகள். பொதுவான முத்திரைகள் எல்லாப் பாடங்களுக்கும் பொதுவானவை அவைகள் தமிழ், கணிதம், ஆங்கிலம் மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலை கல்வி ABL முறை கல்வி தனித்தன்மை வாய்ந்ததாகவும், நேர்த்தியாகவும் உள்ளதால் பள்ளி செல்லாத குழந்தைகளும் பள்ளிக்குச் செல்லவும் AIE மையத்திற்க்குச் செல்லவும் வைக்கின்றது. ABL முறையை நடைமுறைபடுத்தும் ஆசிரியர், ஒவ்வொரு கற்றப் பகுதிக்கும் பயிற்சி முறை மாணவர்களைக் கற்றலுக்கும், மீளக்கற்றலுக்கும், மதிப்பீடு செய்தலுக்கும் தயாராக இருக்க உதவுகின்றது. ABL வகுப்பறை சூழலை பயிற்சியினாலும் அர்த்தமுள்ள கற்றலினாலும் மாற்றிவிட்டது. இந்த முறையானது சிறிய மாற்றங்களுடன் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறையில் உள்ள வெற்றியை பார்த்து இது பஞ்சாயத்து யூனியன் பள்ளிகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.
  9. முதலில் ஒரு குழு அமைக்கப்பட்டு அந்தக்குழு தற்போது நடைமுறையில் உள்ள கற்றல் கற்பித்தலால் 'ஏன் குழந்தைகள் மிக குறைவான கல்வி நிலையில் உள்ளனர்' எனக் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக்குழு உறுப்பினர்கள் தொடக்கக்கல்வியில் அதிகமான வெளிப்பாடு இருந்ததால் அவர்கள் மாணவர்கள் மீதும், பெற்றோர்களின் மீதும் ஆசிரியர்கள் மீதும், அரசு மீதும் இவர்கள் மாணவர்களின் குறைவான கற்றலுக்குக் காரணம் அல்ல என அதிக நம்பிக்கையுடன் இருந்தனர். பிறகு கூர்ந்து கவனிக்கப்பட்டு இந்தக் குழு மாநகராட்சிப் பகுதியில் கீழ்காணும் பழைய முறையில் உள்ள பிரச்சனைகளைக் கண்டறிந்தது. ஆசிரியர் எப்பொழுதும் வகுப்பறையை ஆதிக்கம் செய்கின்றனர்.
  • எப்பொழுதாவது கற்றல், கற்பித்தல் உபகரணங்களைப் பயன்படுத்துதல் எல்லா நேரங்களிலும் விரிவுரை முறையே கடைபிடிக்கப்படுகிறது.
  • திரும்பத்திரும்ப சொல்லி மனதில் வைக்கும் பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
  • ஆசிரியர் தனக்கு மட்டும் எல்லாம் தெரியும் எனவும், மாணவர்களுக்கு ஒன்றுமே தெரியாது எனவும் நினைக்கின்றார்.
  • மாணவர்கள் அனைவரும் ஒரே வேகத்திலும் ஒரே தரத்திலும் கற்கிறார்கள் என ஆசிரியர் நினைக்கின்றார்.
  • ஆசிரியர்கள், மாணவர்களிடையே இடைவெளி அதிகம்
  • கற்றலைவிட கற்பித்தலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
  • குழந்தைகள் பள்ளிக்கு வரதவறிய நாட்களில் கற்க வேண்டிய பகுதிகளை கற்பதற்கு சந்தர்ப்பமே இல்லை.
  • பண்முக அளவு, பண்முகதரம் பற்றி கூறப்படவில்லை.
  • பழமையான மதிப்பீடே உள்ளது.
  • மகிழ்ச்சியான இதரவகை கற்றல் இல்லை
  • விளையாட்டு முறையில் கற்றலும், பயிற்சி செய்தலும் இல்லை
  • மனமொத்த சுயகற்றலுக்கு சந்தர்ப்பம் குறைவு
  • பாடத்திட்டத்தை ஆசிரியர்கள் முடிக்கின்றனர். மாணவர்கள் முடிப்பதில்லை
  • கற்பித்தலுக்கு வகுப்பறையில் குறைந்த அளவே வசதிகள் உள்ளன.
  • கற்பித்தல் உபகரணங்கள் கவர்ச்சிகரமானதகவும, உள்ளார்ந்த பயிற்சியும் இல்லை.
  • சுதந்தரமான கற்றல் இல்லை. எல்லா நேரங்களும் வரையறை படுத்தப்பட்ட சூழ்நிலையிலேயே கற்பிக்கப்படுகிறது.
  • இந்த மேலே கூறிய குறைபாடுகளை நீக்குவதற்காகவே கண்டுபிடிக்கப்பட்டதுதான் ABL அதை சென்னை பள்ளிகள் ஆக்கபூர்வமாக அறிமுகப்படுத்த இருக்கிறது.

ABL திட்டம்

  1. தயார் நிலைக் தகுதிபடுத்துவது (ஆயத்தப்படுத்துதல்)
  2. சோதனை செய்தல்
  3. விரிவு படுத்துதல்
  4. மதிப்பிடுதல்
ஆயத்தப்படுத்தலின் போது முக்கியமான 4 குழு நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் 26 பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் ரிஷிவேலி திட்டத்தில் 3 அல்லது 4 முறை மீண்டும் 2003-2004-ல் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த ABL அணுகுமுறை ஒரு வருடம் தேர்ந்தெடுக்கப்பட்ட 13 பள்ளிகளில் 10 மண்டலங்களில் சோதனை முறையில் பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் 1 மற்றும் 2ம் வகுப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டது. அதன் நோக்கமோ IV வகுப்புவரை ஒருங்கிணைப்பதே இந்த முடிவுடன் சிறப்பாக இருந்ததால் இந்த அணுகுமுறை மாநகராட்சி பள்ளிகளில் 2004-ல் விரிவுபடுத்தப்பட்டது. இந்தக் கட்டத்தில் கற்றல் அட்டைகள் வகுப்பு 1 & 2 (4 பாடங்கள்) மற்றும் ஆசிரியர் வழிகாட்டுதல் அச்சடித்து வெளியிடப்பட்டது.
2005-ஆம் ஆண்டு 3 வகுப்பு 1 & 2-ம் வகுப்புகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டது. 2004-2005ஆம் ஆண்டில் ஒன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கான நான்கு பாடப் பிரிவுகளுக்கான பயிற்சி புத்தகங்கள் தயாரித்து அச்சடித்து, விநியோகப்படுத்தப்பட்டது.

வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் பிற ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தல்

  • செயல்வழிக் கற்றல் திட்டத்தை சமூகமாக நடத்திச் செல்ல ஆசிரியர்களுக்கான தரம் உயர்த்துதல் மற்றும் திரும்புதல் கூட்டங்கள் நடத்தப்பட்டது.
  • வனங்களை அதிகரிக்கவும் துணைபுரியவும், ஒவ்வொரு மண்டலம்/ப்ளாக்கிலிருந்தும் 10 பேர்கள் விகிதம் 100 பேர்கள் கொண்ட ஒரு குழுவிற்குப் போதுமான அளவு செயல்வழிக் கற்றலில் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி பெற்றவர்களே ஒன்றிலிருந்து மூன்றாம் வகுப்பு மாணவர்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும், நான்காம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்தார்கள்.
  • செயல் வழிக்கற்றலைச் சிறந்த முறையில் கண்காணித்து செயல்படுத்த எல்லா ப்ளாக் ரிஸோர்ஸ் டீச்சர்கள், தலைமை ஆசிரியர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஏ.டி.பி.ஸிக்கள் கண்காணிப்பாளர்கள் மற்றும் கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் பல்வேறு சுழற்சியில் பயிற்சி அளிக்கப்பட்டது.
  • தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்களும் மாதிரி பள்ளிகளுக்குச் சென்று, வெற்றிக்கான மற்றும் புகழத்தக்க செயல்களைப் பற்றி கேட்டறிந்து, அவர்களுடன் உரையாடி பயிற்சி பெற்றார்கள்.
  • இதை தவிர, அதே தருணத்தில் ஆசிரியர்களுக்கு உதவுவதற்காக வல்லுநர் குழு மூலமாக தொடர்ந்து உதவி வழங்கப்பட்டு வந்தது.
  • எல்லா நேரமும் ஆசிரியர்களுக்கு உதவுவதற்காகவே பயிற்சி மையம் ஒன்று, இரங்கநாதன் தெரு, நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டது.

செயல்வழிக்கற்றலின் வழிமுறைகள்


  • தனித் திறன்கள் தனித்தனி பகுதிகளாக பிரிக்கப்பட்டு அவைகளை வெவ்வேறு செயல்பாடுகளாக மாற்றப்பட்டிருக்கிறது.
  • ஒவ்வொரு பகுதி அல்லது அலகு மைல்கல் என அழைக்கப்படுகிறது.
  • ஒவ்வொரு பாடப்பிரிவிலும் தகுந்த மைல்கற்களை சேர்த்து ஒரு வளையம் போல பின்னி இணைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இணைக்கப்பட்ட மைல்கற்கள் "லேடர்" என அழைக்கப்படுகிறது.
  • ஒவ்வொரு மைல்கல்லை அடையும் முறையில் வெவ்வேறு படிக்கட்டுகள் உள்ளன. பயிலும் முறையில் வெவ்வேறு படிக்கட்டுகள் உள்ளன. பயிலும் முறையில் உள்ள ஒவ்வொரு படிக்கட்டும் "லோகோ" என அழைக்கப்படுகிறது.
  • மைல்கற்கள் மற்றும் அதில் உள்ள செயல்பாடுகளும், சுலபமான செயல்பாடுகளிலிருந்து கடினமான செயல்பாடுகள் முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
  • மாணவர்களைக் குழுடுகள் உள்ளன. பயிலும் முறையில் உள்ள ஒவ்வொரு படிக்கட்டும் "லோகோ" என அழைக்கப்படுகிறது.
  • மைல்கற்கள் மற்றும் அதில் உள்ள செயல்பாடுகளும், சுலபமான செயல்பாடுகளிலிருந்து கடினமான செயல்பாடுகள் முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
  • மாணவர்களைக் குழுக்களாக சேர்க்கக் குழு அட்டைகள் உபயோகப் படுத்தப்படுகிறது.
  • இந்த முறையிலேயே மதிப்பீடு உள்ளடங்கி இருக்கிறது. இதற்காகத்தனி கார்டுகள் அல்லது செயல்பாடுகள் உபயோகப் படுத்தப்படும்.
  • மேலும் வலுவூட்டுவதற்காக, ஒவ்வொரு குழுந்தைகக்கும் பயிற்சி புத்தகங்கள் அல்லது பயிற்சி ஏடுகள் மூலமாக செயல்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • குழந்தைகளின் வளர்ச்சி ஆண்டு மதிப்பீடு அட்டை மூலமாக பதிவு செய்யப்படுகிறது.
  • ஒவ்வொரு மைல்கல்லுக்கும், அறிமுகம் வலுவூட்டுதல், பயிற்சி மதிப்பீடு, திருப்புதல், குறைதீர் கற்றல் ஆகிய செயல்பாடுகள் 'லாகோ' -கல் மூலமாக செயல்படுத்தப்படுகிறது.

செயல்வழிக்கற்றலின் பயன்கள்

  • குழந்தைகள் அவரவர் வழியிலே பயில்கிறார்கள்
  • தானே கற்றலில் அவர்களுக்குக் கால அவகாசம் அதிகமாகச் கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் வழி கற்றல் குறைக்கப்பட்டுள்ளது.
  • இது குழுவின் மூலம் கற்றல், ஒருவருக்கொருவர் புரிந்து கற்றல் மற்றும் தானே கற்றலை மேம்படுத்துகிறது.
  • ஆசிரியர்கள் கற்பிக்கும் நேரத்தை மாணவர்களுக்குள்ளேயே நேரத்தியாக பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தேவைபட்டால் மட்டும் குழுந்தைகளின் சந்தேகங்களை தீர்த்து வைப்பார்கள்.
  • இம்முறை கற்றலின் வழியில் குழந்தைகள் பங்கேற்பை ஒவ்வொரு படிக்கட்டின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
  • இம்முறையில் குழந்தைகளே அறிய முடியாத அளவில் மதிப்பீடு அமைக்கப்பட்டிருக்கிறது.
  • மனப்பாடம் அல்லது உருப்போட்டு படித்தலுக்கான வழியே இதில் இல்லை
  • இம்முறையில் பள்ளிக்கு வராமல் இருக்கும் குழந்தைகள் ஒழுங்காகக் கண்காணிக்கப்படுவார்கள்.
  • வகுப்பறை நடைமுறைகள் குழந்தைகளின் தேவைகள் மற்றும் ஆர்வத்தையொட்டி இருக்கும்.
  • குழந்தை பயிலுவதிலும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் செயல்பாட்டிலும் சுதந்திரம் இருக்கும்.
  • இம்முறை கற்றலில் பலகிரேட் மற்றும் பலமட்டங்கள் சிறந்து பயன்படுத்தப்படுகிறது.
  • எந்த ஒரு குழந்தையும் நேரடியாக, மேலே செல்ல முடியாது மைல்கல்லில் உள்ள ஒவ்வொரு படிகட்டையும் ஏறித்தான் செல்ல முடியும்.
  • தான் மைல்கல்லை அடைந்து விட்டோம் என்ற உணர்வு குழந்தைக்கு நம்பிக்கையையும், முயற்சியையும் ஏற்படுத்துகிறது.
  • கண்கவர் அட்டைகளும், செயல்பாடுகளும் குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டுகிறது.
  • குழந்தையின் ஆக்கப்பூர்வமான செயல் மற்றும் தகவல் பறிமாற்றத் திறன்கள் வளர்ச்சி அடைய வழிவகுக்கிறது.
  • குழந்தைகள் குழுவில் இருக்கும் பொழுது ஒருவித பாதுகாப்பை உணர்வார்கள்.
  • குழந்தைகள் ஒரே இடத்தில் இல்லாமல் வகுப்பறைக்குள்ளேயே நகர்ந்து செயல்பாட்டை முடிக்கலாம்.
செயல்வழிக் கற்றல் 6000 AIE மையங்களைத் தவிர மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்கமான பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது. செயல்வழிக் கற்றலில் உள்ள பொருத்தமான அட்டைகள், ப்ளாக் ரிஸோர்ஸ் மையங்களில் நிரந்தரமாக கிடைக்கப்பெற்றுள்ளன. நெகிழவைக்கும் இந்த வழியை சில பள்ளிகளில் (ஒரு ப்ளாக்கில் 10 பள்ளிகள் வீதம்) பரிசோதனை செய்ய முயற்சி எடுக்கப்பட்டது. பரிசோதனைக்குப் பிறகு செயல்வழிக் கற்றல் மாடல்களையும், தானே கற்றல் பொருட்களையும் பள்ளிகளில் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த நிரிஸோர்ஸ் மையங்களில் நிரந்தரமாக கிடைக்கப்பெற்றுள்ளன. நெகிழவைக்கும் இந்த வழியை சில பள்ளிகளில் (ஒரு ப்ளாக்கில் 10 பள்ளிகள் வீதம்) பரிசோதனை செய்ய முயற்சி எடுக்கப்பட்டது. பரிசோதனைக்குப் பிறகு செயல்வழிக் கற்றல் மாடல்களையும், தானே கற்றல் பொருட்களையும் பள்ளிகளில் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை செயல்படுத்த ஆசிரியர் கல்வி இயக்குநரகமும், தொடக்கக் கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி இயக்குநரகமும் முனைந்து அதற்காகப் பயிற்சி அளித்துச் செயல் படுத்தப்படுகிறது. புதுமையான கல்வி இயக்கத்தில் மேலும் ஒரு மௌனப் புரட்சி இது!
  • நான் கேட்டேன், மறந்தேன்,
  • நான் பார்த்தேன், நினைவில் கொண்டேன்,
  • நான் செய்தேன், புரிந்து கொண்டேன்.
  • உடல்நலம் மற்றும் நலம் பேணுதல்
அனைத்துப் பள்ளிகளிலும் முழுமையான உடல்நலம் சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் சென்னை மாநகராட்சியில், மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்டு மருந்துகளும் வழங்கப்படுகின்றன.
பெண்களுக்கான நாப்கின்கள் வழங்கப்படுகிறன்றன. நாப்கின்களை அழிப்பதற்கான கருவிகளும் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளன. சுத்தம் செய்யும் நாள் அனைத்து சென்னை பள்ளிகளில் கொண்டாடப்பட்டது. காலை இறைவணக்கத்தின் போது சுகாதார பழக்கங்கள் பற்றி சிறு வாசகங்களை மாணவர்கள் கூறி வருகிறார்கள்.

ஆதாரம் : சென்னை மாநகராட்சி கல்வித்துறை